கியூபா- அமெரிக்கா இடையே மலரும் உறவு: பிடல் காஸ்ட்ரோ கருத்து
ஹவானா: பரம எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் கியூபாவும் பகைமையை முறித்து உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முன்வந்துள்ள நிலையில் அந்நாட்டு முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
கம்யூனிச கொள்கைகளை பின்பற்றும் நாடுகளில் ஒன்றான கியூபாவுக்கும், முதலாளித்துவ நாடுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கும் இடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்காவின் சிம்ம சொப்பனமாக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை படுகொலை செய்வதற்கும், கியூபாவில் குழப்பத்தை உருவாக்குவதற்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. செய்யாத சதி வேலைகளே இல்லை..

ஆனாலும் அமெரிக்காவால் கியூபாவை அடக்க முடியவில்லை. இதனால் விட்டுக் கொடுத்து இறங்கிப் போவது என்ற நிலையை அமெரிக்கா அதிபர் ஒபாமா எடுத்தார். அண்மையில் கியூபாவை தங்களால் வெற்றி கொள்ள முடியவில்லை என்று பகிரங்கமாகவே ஒபாமா ஒப்பும் கொண்டார். இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே உறவுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 88 வயதாகும் கியூபாவின் தந்தையான முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, இப்புதிய மாற்றம் குறித்த தமது அதிகாரப்பூர்வ கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள பல்கலைக் கழகத்தின் மாணவர் கூட்டமைப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு (ஜனவரி 26) எழுதிய கடிதம் ஒன்றில், அமெரிக்காவின் கொள்கைகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இது தொடர்பாக எந்த ஒருவார்த்தையும் அவர்களுடன் நான் பேசியதும் இல்லை.. அதற்காக பிரச்சனைகளுக்கான தீர்வுகளை நான் நிராகரிக்கிறேன் என்பதும் அர்த்தம் அல்ல.
நமது அரசியல் எதிரிகள் உட்பட உலக நாடுகளின் அனைத்து மக்களுடனும் நல்லுறவை பாதுகாகாப்போம் என்று அதில் கூறியுள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக காஸ்ட்ரோவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவின. அப்போது கால்பந்தாட்ட வீரர் மரடானோவுக்கு காஸ்ட்ரோ கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இதனால் அவரது உடல்நலன் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications