தாய்லாந்து: சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஃபிபா.. இறுதிப்போட்டியை பார்க்க செல்வார்களா?
தாய்லாந்து குகைக்குள் சிக்கி தற்போது மீண்டு இருக்கும் சிறுவர்கள் ஃபிபாவின் அழைப்பின் படி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் சிக்கி தற்போது மீண்டு இருக்கும் சிறுவர்கள் ஃபிபாவின் அழைப்பின் படி, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் மீதமுள்ள 2 பேரை மீட்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவரை 11 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற குகைக்குள் சுற்றுலா சென்ற தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள்.
கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து மூன்றாம் கட்ட மீட்பு பணி நடந்து வருகிறது.

உலகக் இறுதி போட்டி
தற்போது கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது, அதுவும் கால்பந்து வீரர்களுக்கு நடந்து இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் 5 நாட்களில் கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளது.

விழாவிற்கு அழைத்தனர்
இந்த நிலையில், இந்த சிறுவர்களை ஃபிபா அமைப்பு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காண அழைத்து இருக்கிறார்கள். அதன்படி இவர்கள் மீண்டு வந்ததும், கண்டிப்பாக, இறுதி போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சிகிச்சை செய்து வருகிறார்கள்
இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 1 சிறுவன், 1 பயிற்சியாளரை மீட்க வேண்டும். இதுவரை மீட்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் சரியான உடல்நிலை பெற இன்னும் ஒரு வாரம் ஆகலாம்.

பெரிய அளவில் சந்தேகம்
இந்த மருத்துவ பிரச்சனை காரணமாக தற்போது அந்த சிறுவர்கள் உலகக் கோப்பை இறுதி போட்டியை காணும் வாய்ப்பை தவற விடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் உடல் நிலை இப்போதுதான் சரியாகி வருகிறது. இதனால் அவர்கள் இறுதிப் போட்டியை காண செல்வது கஷ்டம்தான் என்று கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications