நேட்டோவில் இணைந்த பின்லாந்து.. இனி எல்லையில் சீனே வேற.. பதறும் ரஷ்யா.. ஏன் ரொம்ப முக்கியம்
ஹெல்சின்கி: ஐரோப்பிய நாடான பின்லாந்து ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. நேட்டோவில் இணையும் 31ஆவது நாடு பின்லாந்து ஆகும்.
சர்வதேச அரசியலில் இப்போது மிக முக்கிய மாற்றங்கள் நடந்து வருகிறது. உக்ரைன் போர் தொடங்கிய சமயத்தில் உலக நாடுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்தன.
சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தன. இதற்கிடையே உலகரங்கில் இப்போது நடந்துள்ள மற்றொரு நிகழ்வு ரஷ்யாவுக்கு எதிராக மாறியுள்ளது.

போர்
உக்ரைன் நாட்டில் இப்போது போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்பதே இந்த போர் ஆரம்பிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. ஏனென்றால் நேட்டோ அமைப்பில் இணைந்தால், நேட்டோ படைகள் அந்த நாட்டிற்குள் வரும். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் நேட்டோ படைகள் உக்ரைனுக்கு வந்தால் அது தங்களுக்கு ஆபத்தைத் தரும் என்று புதின் கருதினார். இதுவே போருக்குக் காரணமாக அமைந்தது.

பின்லாந்து
ஆனால், இந்த போர் மற்ற ஐரோப்பிய நாடுகளை அச்சம் கொள்ள வைத்தது. தங்கள் மீதும் ரஷ்யா போரை ஆரம்பித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அவர்கள் கருதினார்கள். ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் இத்தனை காலம் நேட்டோ அமைப்பில் இருந்து தள்ளியே இருந்த ஐரோப்பிய நாடான பின்லாந்து, நேட்டோவில் இணைய முடிவு செய்தது. இந்த போருக்குப் பின் நடந்த கருத்துக்கணிப்பில் சுமார் 80% பின்லாந்து மக்கள் நேட்டோவில் இணைய வேண்டும் என்றே கூறினர்.

நேட்டோவில் பின்லாந்து
இதற்கான நடைமுறைகள் சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இதற்கு ரஷ்யா மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. விளைவுகள் மோசமாக இருக்கும் என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்தது. இருப்பினும், பின்லாந்து தனது முடிவில் உறுதியாக இருந்தது. இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பின்லாந்து ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31ஆவது நாடு
நேட்டோவில் இணையும் 31ஆவது நாடு பின்லாந்து ஆகும். இப்போது நேட்டோ அமைப்பில் பின்லாந்து இணைந்துள்ள நிலையில், நேட்டோ அமைப்பு நாடுகளுடன் ரஷ்யா பகிரும் எல்லை என்பது இரட்டிப்பாகியுள்ளது. பின்லாந்து ரஷ்யாவுடன் 1,340-கிமீ கிழக்கு எல்லையைப் பகிர்ந்து கொண்டது. பின்லாந்து இப்போது நேட்டோ அமைப்பில் உறுப்பினராகியுள்ள நிலையில், இது ஐரோப்பாவின் பாதுகாப்பில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நேட்டோ படைகள் ரஷ்யா பின்லாந்து எல்லைக்கும் தேவைப்பட்டால் அனுப்பப்படலாம்.

அதென்ன நேட்டோ
North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கமே நேட்டோ ஆகும். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரான்ஸ் உட்பட 12 நாடுகளால் 1949இல் நேட்டோ அமைப்பை உருவாக்கின. இது சர்வதேச அளவிலான ஒரு பாதுகாப்பு கூட்டமைப்பு நாடாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் விரிவாக்கத்தைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். நேட்டோ நாடுகளில் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மற்ற அனைத்து நாடுகளும் உதவிக்கு வரும்.

ரொம்ப முக்கியம்
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் தோல்வியடைந்த பிறகு பின்லாந்து நடுநிலை போக்கையே எடுத்து வந்தது. இருப்பினும், உக்ரைன் போரால் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா தங்கல் மீதும் தாக்குதல் நடத்தும் என்று அஞ்சிய பின்லாந்து நேட்டோவில் இணைய முடிவு செய்தது. அதேபோல 200 ஆண்டுகளாக நடுநிலை கொள்கையில் இருந்த ஐரோப்பிய நாடான ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் ஸ்வீடனும் நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளது. இருப்பினும், நேட்டோ உறுப்பினர்களான துருக்கி மற்றும் ஹங்கேரி நாடுகள் அதிருப்தி தெரிவித்ததால் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications