சீனாவின் குட்டு வெளிவந்தது.. இந்தியா பாகிஸ்தான் சண்டை குறித்து கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
பீஜிங்: பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்கவும் பிராந்திய ஒருமைப்பாட்டு மற்றும் தேசிய சுதந்திரத்திற்காக உறுதியாக தொடர்ந்து துணை நிற்போம் என்று சீனா கூறியுள்ளது. பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்கிறது என்று சீனா கூறியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்கிறது என்று சீனா கூறியிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரிடம் தொலைபேசியில் பேசிய போது இவ்வாறு கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானின் உறுதியான கூட்டாளியாக சீன இருப்பதை அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
சவாலான காலகட்டத்தில் நிதானத்தையும் பொறுப்புடன் பாகிஸ்தான் நடந்து கொண்டதை சீனா பாராட்டியது. பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்கவும் பிராந்திய ஒருமைப்பாட்டு மற்றும் தேசிய சுதந்திரத்திற்காக உறுதியாக தொடர்ந்து துணை நிற்போம் என்று சீனா கூறியது" என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
முன்னதாக சீன வெளியுறவு விவகார அமைச்சர் வாங் யீ, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அஜித் தோவல், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. இதனால் பயங்கரவாதத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இந்தியாவின் நோக்கம் போர் கிடையாது.
போரினால் யாருக்கும், எந்த தரப்புக்கும் நன்மை கிடையாது என்றும் கூறினார். மேலும் இந்தியாவும் சீனாவும் போராட விரும்பவில்லை. அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவு விரும்புவதாகவும் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய வாங் யீ, போரை இந்தியா விரும்பவில்லை என்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பயங்கரவாதத்தை சீனா கண்டிக்கிறது. பஹல்காம் தாக்குதலை சீனா கண்டிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்க்கிறது. ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பேணுவது மிகவும் அவசியம், இரு நாடுகளும் அண்டை நாடுகள் என்றார். இரு நாடுகளும் அமைதி, தெளிவு மற்றும் முறையான பேச்சுவார்த்தையின் மூலம் மோதலைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications