Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெஞ்சே பதறுதே.. சுற்றிலும் எல்லாரும் நிற்க.. மைதானத்தின் நடுவே அரங்கேறிய கொடுமை.. தாலிபன்கள் பகீர்

ஆப்கன் பெண்கள் 3 பேர் உட்பட 12 பேருக்கு கசையடி தண்டனை தரப்பட்டது

Subscribe to Oneindia Tamil

ஆப்கன்: இன்னொரு கொடுமை ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ளது.. ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. கல்வியை நோக்கி அடியெடுத்து வைத்து கொண்டிருந்த பெண்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதும், கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளதும், மீளா துயரில் ஆழ்த்தி வருகிறது.

இப்படி பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தடை விதித்து, அவர்களுக்கு கல்வி அளிக்க மறுத்து வருவதற்கு ஐநா கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தது..

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

திரைச்சீலை உதவியுடன் மாணவர்களை தனியாக பிரித்து உட்கார வேண்டும் என்றும், பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்துவர் என்றும் தாலிபன்கள் உத்தரவிட்டனர். அதேபோல, மகளிர் மேம்பாட்டுத்துறையில் கூட பெண்கள் வேலைபார்க்கத் தடை விதிக்கப்பட்டது.. பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்துவிட்டனர். இதனிடையே, இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

நிரூபணம்

நிரூபணம்

அந்தவகையில், இன்னொரு அதிர்ச்சி சம்பவம் கடந்த மாதம் அங்கு நடந்தது.. லோகர் மாகாணத்தின் பல் ஆலம் நகரில், ஒரு பெரிய மைதானத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் கூடிநிற்க, அவர்கள் முன்னிலையில் 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு தாலிபான்கள் கசையடி தண்டனை கொடுத்தனர்.. இந்த 12 பேரும், திருட்டு மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக, கோர்ட்டில் நிரூபணமானவர்கள்.. அதனால், தண்டனையை தாலிபன்களே நிறைவேற்றினர்.. பரந்து விரிந்த அந்த மைதானத்திற்கு, 12 குற்றவாளிகளும் அழைத்து வரப்பட்டனர்...

ஆடைகள்

ஆடைகள்

நூற்றுக்கணக்கான ஆண்கள் அங்கு குவிந்திருந்தனர்.. குற்றஞ்சாட்டப்பட்ட 3 பெண்கள் உள்பட 12 பேரையும் மைதானத்தில் மையப்பகுதியில் நிறுத்தப்பட்டனர். அங்கு குற்றத்தின் அடிப்படையில் 12 பேருக்கும் 21 முதல் 39 கசையடிகள் தண்டனையாக வழங்கினர்.. இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமல்படுத்தி கடுமையான தண்டனைகள் விதித்து வரும் நிலையில், இந்த தண்டனையும் தற்போது அரங்கேறி உள்ளது. இவர்களுக்கு தண்டனை தருவதை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, ட்விட்டர், பேஸ்புக்குகளில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கசையடிகள்

கசையடிகள்

இந்த நிலையில் மற்றொரு கொடூரம் நடந்துள்ளது.. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு முதல்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.. கடந்த தலிபானின் உச்சதலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா பொது மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி, திருடர்களின் கை, கால்களை வெட்டுதல் உள்ளிட்ட சட்டங்களை முழுமையாக அமல்படுத்துமாறு நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்..

 பைக் + செல்போன்

பைக் + செல்போன்

இதையடுத்து கொலை குற்றம் சாட்டப்பட்ட நபர் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.. 2017-ல், ஒருவரை கொன்று, அவரது பைக்கையும், செல்போனையும் திருடி சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது.. இதற்காகவே இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.. மேற்கு மாகாணத்தின் தலைநகரான பாராவில், தூக்கிலிடப்பட்டார் அந்த நபர்..

 நெஞ்சே பதறுதே

நெஞ்சே பதறுதே

முன்னதாக, 3 நீதிமன்றங்களிலும் அவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதாலும், அவரின் மரண தண்டனையை ஆப்கானிஸ்தானின் தெற்கு கந்தஹார் மாகாணத்தை சேர்ந்த தலிபானின் தலைவரும் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாலும் குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனையை நிறைவேற்றும்போது, தலிபானின் முக்கிய தலைவர்களும் உடன் இருந்தனர். இதை பற்றி தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹில்லா முஜாகித் சொல்லும்போது, மேற்கு பாரா மாகாணத்தில் 2017-ம் ஆண்டு ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆப்கானிஸ்தானில் பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டன என்றார்.

நடுங்குதே

நடுங்குதே

இதன் மூலம் 90களின் காலகட்டங்களில் இருந்த தாலிபன்கள் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான தண்டனைகள் மீண்டும் திரும்பியுள்ளது.. இந்தச் சம்பவம் தொடர்பாக உலகம் முழுவதிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தாலிபன்களுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தாலிபன்கள் பொறுப்பேற்ற பிறகு பொதுவெளியில் மீண்டும் மரண தண்டனை விதித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே மட்டுமல்லாமல் உலக நாடுகளை கலங்கடித்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+