சூப் குடித்தபோது விபரீதம்.. தொண்டையில் சிக்கிய மீன் முள் கழுத்தை கிழித்து தோளுக்கு மேல் வந்தது
பாங்காக்: தாய்லாந்தை சேர்ந்த 45 வயது பெண் ஆசையாக மீன் சூப் வாங்கி குடித்தார். அப்போது அவர் மீன் முள்ளை விழுங்கினார். தொண்டையில் சிக்கிய இந்த மீன் முள் ஒரு வாரம் கழித்து அவரது கழுத்தை கிழித்து கொண்டு வெளியே தெரிந்தது. இதையடுத்து ஆபரேஷன் செய்து அந்த மீன் முள் வெளியே எடுக்கப்பட்டது.
சத்தான அசைவ உணவுகளில் ஒன்று மீன். இந்த மீனில் பல்வேறு ஊட்டசத்துகள் உள்ளன. உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதம், எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் டி, இதயநோய் அபாயத்தை குறைக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மீனில் உள்ளன.

இதுதவிர நரம்பு மண்டல செயல்பாட்டை சீராக வைக்கும் வைட்டமின் பி 12, உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், அயோடின், ஜிங்க் உள்ளிட்ட பல தாதுக்கள் மீனில் அதிகம் உள்ளன. வயது பாகுபாடு இன்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மீனை சமைத்து சாப்பிடலாம்.
இப்படி சத்து நிறைந்த மீனை ரசித்து ருசித்த சாப்பிட ஒரு கூட்டம் இருந்தாலும் கூட, இன்னொரு தரப்போ மீனா, வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி விடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மீனில் இருக்கும் முள் தான். முள்ளை தனியாக பிரித்து எடுத்து விட்டு மீனை ருசிக்க வேண்டும். அதேபோல் மீன் உணவை மட்டும் என்றும் அவசரகதியில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் மீன் முள் தொண்டைக்குள் சிக்க வாய்ப்புள்ளது. இதனாலே இன்றும் கூட நம்மில் பலரும் மீன் உணவுகளை தவிர்ப்பது உண்டு.
இந்நிலையில் தான் தாய்லாந்தை சேர்ந்த 45 வயது பெண் ஆசையாக மீன் சூப் குடித்து அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார். அப்படி என்ன நடந்ததது ? வாங்க பார்க்கலாம். தாய்லாந்தை சேர்ந்தவர் சூரியன். இவரது மனைவிக்கு 45 ஆகிறது. இந்நிலையில் தன் சூரியனின் மனைவி ஆசையாக மீன் சூப் வாங்கி பருகினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது தொண்டையில் மீன்முள்ளை விழுங்கினார். அந்த மீன் முள் அவரது தொண்டையில் சிக்கியது.
இதனால் அவருக்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டு மீன் முள்ளை வெளியே தள்ள முயன்றார். அது நடக்கவில்லை. வாழைப்பழத்தையும் சாப்பிட்டு பார்த்தார். அந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அதன்பிறகு தனது விரலை வாயிற்குள் செலுத்தி வாந்தி எடுக்க முயன்றார். இந்த முயற்சியும் கைக்கொடுக்கவில்லை.
இதையடுத்து வேறு வழியின்றி மருத்துவமனைக்கு சென்றார். எக்ஸ் ரே எடுத்து டாக்டர்கள் பார்த்தனர். ஆனால் தொண்டையில் மீன் முள் எதுவும் தெரியவில்லை. ஒன்று 2 மருத்துவமனைகளில் பரிசோதனை செய்தும் கூட டாக்டர்களால் மீன் முள்ளை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் அவர் வலியுடன் வாழ்ந்தார். 2 வாரங்கள் கழிந்த நிலையில் அவரது கழுத்தில் கடும் வலி ஏற்பட்டது. தொட்டு பார்த்தபோது தான் தொண்டையில் சிக்கிய மீன் முள் கழுத்தை குத்தி கிழித்து தோளின் மேல்புறம் வந்திருப்பதை அறிந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து மீன் முள்ளை அகற்றினர்.
இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் சூரியன் முகநூல் பக்கத்தில் விழிப்புணர்வு பதிவை செய்துள்ளார். அதில், ‛‛சின்ன ஒன்று சீரியஸான பாதிப்பை ஏற்படுத்தலாம். மீன் சாப்பிடும்போது மக்கள் கவனமாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு கூட போகலாம்'' என்று தனது மனைவிக்கு நேர்ந்த கதியை குறிப்பிட்டு அறிவுரை வழங்கி உள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications