'விமானம்': உரிய தகவல் வெளியிடாவிட்டால் உண்ணாவிரதம் - சீன பயணிகளின் குடும்பத்தார் எச்சரிக்கை
பெய்ஜிங்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் குறித்த உரிய தகவல்களை உடனடியாக வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் பட்டினிப் போராட்டத்தில் குதிப்போம் என்று விமானத்தில் மாட்டியுள்ள சீனப் பயணிகளின் குடும்பத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீன அரசு விமானத்தைத் தேடுவதற்காக, 21 செயற்கைக் கோள்களை பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தும், இதுவரை உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில்தான் மலேசிய அரசு உடனடியாக உருப்படியான, ஆக்கப்பூர்வமான, தெளிவான தகவல்களைத் தெரிவிக்காவிட்டால் தொடர் பட்டினிப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக சோகத்தில் மூழ்கியுள்ள சீனப் பயணிகளின் குடும்பத்தார் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சோகத்தில் குமுறிய வென் வான்சென்
விமானத்தில் பயணித்துள்ள ஒரு சீ4னப் பயணியின் மகனான வென் வான்சென் என்பவர் கூறுகையில், எங்களுக்கு ஒரு தகவலும் இல்லை, ஒரு செய்தியும் இல்லை. ஒன்றுமே புரியவில்லை. எல்லோரும் சொல்ல முடியாத அளவுக்கு கவலையில் மூழ்கியுள்ளோம் என்றார் குமுறலுடன்.

மலேசியத் தூதரைப் பிடித்து உலுக்க வேண்டியதுதான்
பேசாமல் அனைவரும் மலேசியத் தூதரகத்தை முற்றுகையிட்டு மலேசியத் தூதரைப் பிடித்து சரமாரியாக கேள்வி கேட்க வேண்டும் என்று அனைவரும் துடிக்கிறார்கள். ஆனால் அவரோ தூதரகத்திலேயே இல்லை. அவரைக் கண்டுபிடிக்க தனியாக தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் போல.

பட்டினிப் போராட்டமே ஒரே வழி
இனால் பலரும் பட்டினிப் போராட்டம் நடத்தி மலேசிய அரசை பணிய வைக்க திட்டமிட்டு வருகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் வென் கூறினார்.

வடக்கில் சீனா தேடுகிறது.. தெற்கில் ஆஸி,இந்தோனேசியா
தற்போது சீனா வடக்குப் பிராந்தியம் முழுவதும் தேடி வருகிறது. அதேபோல தெற்கில், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் தேடி வருகின்றன.

இந்தியப் பெருங்கடலில்
இந்தியப் பெருங்கடலில் கிட்டத்தட்ட 6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஆஸ்திரேலியா தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது. ஒரு அங்குலம் கூட விடாமல் சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருக்கிரது ஆஸ்திரேலியா.

தென் சீனக் கடல் முழுவதும் தேடியாச்சு
இதற்கிடையே தென் சீனக் கடல் முழுவதையும் தேடிப் பார்த்து விட்டோம். எதுவுமே கிடைக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.

150 சீனப் பயணிகள்
மாயமாகியுள்ள விமானத்தில் பயணிகள் உள்பட மொத்தம் 239 பேர் இருந்தனர். இதில் 150 பேர் சீனப் பயணிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 8ம் தேதி விமானம் காணாமல் போனது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications