பிரான்சிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குகிறது இந்தியா: பிரதமர் மோடி
பாரீஸ்: இந்திய விமானப் படையின் தேவையைப் பூர்த்தி செய்ய பிரான்ஸ் நாட்டிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரான்சில் தயாரிக்கப்படும் ரஃபேல் ஜெட் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், இந்தியா - பிரான்ஸ் இடையே 2007-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

ரூ.79,000 கோடி மதிப்பில் 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இரு நாடுகளிடையே கடந்த மூன்றாண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் விலை நிர்ணயம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தை நீடித்து வந்தது.
இந்நிலையில், பிரான்சுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பிரான்ஸாய் ஹலாந்தை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, தொழில்துறை, விண்வெளி ஆராய்ச்சி, சமூகக் கட்டமைப்பு, கல்வி, சுற்றுலா மேம்பாடு, இளைஞர்கள் திறன் மேம்பாடு என பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதனை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் ஹலாந்தேயும் இணைந்து அறிவித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தற்போது இயங்கும் நிலையில் உள்ள 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது குறித்து பிரான்ஸ் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இது தொடர்பாக சுமூகமான பேச்சு இருந்தது. அத்துடன் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோத்பூர் அணு உலைத் திட்டமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி ஜோத்ப்பூரில் 6 அணு உலைகளை பிரான்ஸின் அரீவா நிறுவனம் அமைக்கும் என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications