தாவூத் இப்ராஹிம் கராச்சி 'ஒயிட் ஹவுசில்' இருக்கிறார்.. முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், தங்கள் நாட்டில் இருப்பதே பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
Recommended Video
மும்பையில் சட்டவிரோத தொழில்கள் மூலமாக பெரும் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் தாவுத் இப்ராஹிம். 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் இவர் மூளையாக செயல்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
அவ்வப்போது இந்தியா இதற்கான ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன்பாக வைத்து, தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் பாகிஸ்தான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை.

ஒயிட் ஹவுஸ்
ஆனால் சர்வதேச நிதி நடவடிக்கை பணி குழுவிடம் பாகிஸ்தான் சனிக்கிழமை வழங்கிய அறிக்கை ஒன்றில் தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. கராச்சி நகரத்தில் ஒயிட் ஹவுஸ் என்று அழைக்கப்படும் ஒரு கட்டிடத்தில் தாவூத் இப்ராஹிம் வசிப்பதாக அந்த அறிக்கையில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஒயிட் ஹவுஸ் என்பது அமெரிக்க அதிபர் மாளிகையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பல் பட்டியல்
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்தது. அந்த நாட்டிலிருந்து செயல்படக்கூடிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் பாகிஸ்தான் முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் தீவிரவாத குழுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பாகிஸ்தான் அதை செய்யவில்லை.

88 தீவிரவாத இயக்கங்கள்
இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணி குழுவிடம் பாகிஸ்தான் சனிக்கிழமை வழங்கிய பட்டியலில் தங்கள் நாட்டில் செயல்படக்கூடிய 88 தீவிரவாத இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் நிதி நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருப்பு பட்டியலில் இருந்து தப்பிக்க
அதில் ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவனாக தாவூத் இப்ராகிமை பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் வெளிப்படையாக நடந்து கொள்ளாவிட்டால், ஈரான், வடகொரியா மாதிரி, இந்த நாட்டையும் கருப்பு பட்டியலில் சேர்க்க சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் பாகிஸ்தான் நல்ல பிள்ளைபோல இவ்வாறு ஒரு பட்டியலை நீட்டி உள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

நடவடிக்கைகள் என்ன?
தாவூத் இப்ராஹிமின் பண பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுத கொள்முதல் தடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாவூத் மீது மட்டுமல்ல, 26/11 மும்பை தாக்குதல் சூத்திரதாரி மற்றும் ஜமாத்-உத்-தாவா (ஜுடி) தலைவர் ஹபீஸ் சையீத், ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்) தலைவர் மசூத் அசார் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய நபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து பாகிஸ்தான் அரசு ஆகஸ்ட் 18ம் தேதியன்று இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கும், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications