வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான பேகம் கலிதா ஜியா காலமானார்.. என்ன நடந்தது?
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 80 வயதாகும் கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி காலமானார்.
வங்கதேச முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியா இன்று காலமானார். டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் பல வாரங்களாக தீவிர சிகிச்சையில் இருந்த அவருக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று மாலை முதலே அவரின் உடல்நிலை மோசமாகி வந்தது.

இந்த நிலையில் 80 வயதில் பேகம் கலிதா ஜியா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவரது கட்சி தரப்பில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா நம்மிடையே இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பேகம் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த நவம்பர் 23ஆம் தேதி டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். டிசம்பர் மாத தொடக்கத்தில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
டிசம்பர் 11ஆம் தேதி முதலே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து வெளிநாட்டு மருத்துவர்களும் கூட பேகம் கலிதா ஜியாவுக்கு சிகிச்சை அளித்தனர். உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவரை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல அக்கட்சி நிர்வாகிகள் முன்பு தெரிவித்திருந்தனர். ஆனால், விமானப் பயணம் மேற்கொள்ள அவரது உடல்நிலை அனுமதிக்கவில்லை.
வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராகவும், முன்னாள் பிரதமராகவும், அந்நாட்டின் அரசியல் விவாதங்களை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். 1991 - 1996 மற்றும் 2001 - 2006 ஆகிய 10 ஆண்டுகள் வங்கதேச பிரதமராக செயல்பட்டுள்ளார். வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் பேகம் கலிதா ஜியா. இவரது மறைவு அக்கட்சி தொண்டர்களுக்கும், மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications