உள்ளே வரும் உலக நாடுகள்.. இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தத்தில் பெரிய ட்விஸ்ட்.. இதை யாரும் எதிர்பார்க்கல
கெய்ரோ: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் இப்போது சில நாட்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்போது முதலில் இஸ்ரேல் நாட்டில் இறங்கிய ஹமாஸ் தீவிரமாகத் தாக்குதலை நடத்தியது. அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதலை ஆரம்பித்தது.

அதிலும் காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் அங்குள்ள ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். மேலும், ஹமாஸின் சுரங்கங்கள் மீதும் இஸ்ரேல் தாக்கினர். இந்தச் சூழலில் தான் சர்வதேச நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வலியுறுத்தினர்.
போர் நிறுத்தம்: முதலில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பெரியளவில் பிடிகொடுக்கவில்லை. இருப்பினும், சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் அழுத்தம் அதிகரித்த நிலையில், போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டது. நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், அது கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், இதுவரை இரண்டு பேட்ஜ் பிணையக் கைதிகளை ஹமாஸ் ரீலீஸ் செய்துள்ளது. தற்போது இரு தரப்பிற்கும் இடையே 4 நாட்கள் போர் நிறுத்தம் இருக்கும் நிலையில், அது மேலும் சில நாட்கள் நீட்டிக்க வாய்ப்புள்ளதாகப் பேச்சுவார்த்தையை மத்தியஸ்தனாம் செய்யும் எகிப்து தெரிவித்துள்ளது.
கத்தார்: இது தொடர்பாக கத்தார் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "ஹமாஸ் ஒரு பக்கம் பிணையக் கைதிகளை பேட்ஜ் பேட்ஜாக விடுவித்து வருகிறார்கள். மறுபுறம் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பாலஸ்தீனிய கைதிகளும் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்" என்றார்.
காசாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகச் சண்டை தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த போர் நிறுத்தம் காசா மக்களுக்கு நிம்மதியைத் தருவதாக அமைந்துள்ளது. அங்குள்ள மக்களுக்குத் தேவையான உதவி பொருட்கள் உள்ளே வரவும் இந்த போர் நிறுத்தம் பெரியளவில் உதவும்.
உதவி பொருட்கள்: காசா பகுதிக்குள் முக்கிய உதவிகள் அனைத்தும் ரஃபா எல்லை வழியாகவே உள்ளே வருகிறது. அந்த எல்லை எகிப்து கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை வரிசையாகப் பல வாகனங்கள் உதவி பொருட்களுடன் காசாவுக்குள் நுழைந்துள்ளன. இதற்கிடையே இரு தரப்பில் இருந்தும் பாசிட்டிவ் சிக்னல்கள் வந்துள்ளதாகக் கூறும் கத்தார், இந்த போர் நிறுத்தம் மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.
இது தொடர்பாக எகிப்தின் தியா ரஷ்வான் கூறுகையில், "பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. ஹமாஸ் வசம் இருக்கும் கூடுதல் பிணையக் கைதிகளை விடுவிப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது என அனைத்து தரப்பினருடனும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்றார்.
தற்போதுள்ள ஒப்பந்தத்தின் கீழ், மொத்தம் 50 பிணையக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும். முதலில் சிறுவர்கள், பெண்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதேநேரம் நேரம் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக 150 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க இருக்கிறது. அவர்களில் சிலர் கடுமையான பிரிவுகளில் தண்டனை பெற்றவர்கள் ஆவர்.
அமெரிக்கா கருத்து: இது வெறும் தற்காலிக போர் நிறுத்தம்தான் என்றும் மீண்டும் சண்டை நிச்சயம் தொடரும் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டிருந்தது. அதேநேரம் தற்போதுள்ள நிலைமையை வைத்துப் பார்க்கும் போது போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதில் இறுதியில் என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications