பிரான்ஸ் பள்ளிகளில் இஸ்லாமியர்களுக்கு உடை கட்டுப்பாடு.. கல்வித்துறை அமைச்சரின் புதிய உத்தரவு இதுதான்
பாரீஸ்: மத ரீதியிலான அடையாளங்களை அரசு பள்ளிகளில் தவிர்க்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசு முடிவெடுத்துள்ள நிலையில், இஸ்லாமியர்கள் அணியும் 'அபயா' உடையை பள்ளிக்கு அணிந்துவரக்கூடாது என்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரான்ஸ் நாடு அடிப்படையில் கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்ட நாடாகும். இருப்பினும், கல்வி நிலையங்களில் இந்த மத அடையாளங்களை அந்நாட்டு அரசு அனுமதிக்க மறுத்துவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொதுக்கல்வியை கத்தோலிக்க மதம் செல்வாக்கு செலுத்தி வந்தது. ஆனால் பின்னாட்களில் வந்த ஆட்சியாளர்கள் இந்த செல்வாக்கை மெல்ல தகர்த்தனர். பின்னர் அரசுப் பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு கடுமையான தடையை அந்நாட்டு அரசு பின்பற்ற தொடங்கியது.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்து வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு பெண்கள் முக்காடு அணிவதை அந்நாட்டு அரசு தடை செய்தது. பின்னர் கடந்த 2010ம் ஆண்டு பொது இடங்களில் முழு முகத்தை மூடுவதற்குத் தடை விதித்தது. பிரான்சில் சுமார் 50 லட்சம் இஸ்லாமியர்கள் வாழும் நிலையில் இந்த தடைகள் அவர்களை சீண்டியது.
இதனைத் தொடர்ந்து இஸ்லாமியர்கள் அணியும் அபயா உடையை, அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் என யாரும் அணியக்கூடாது என்றும் புதியதாக உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், "அடுத்த மாதம் புதிய கல்வியாண்டு தொடங்க உள்ள நிலையில், இந்த தடை உத்தரவு அடுத்த மாதத்திலிருந்து அமல்படுத்தப்படும்.
மாணவர்களின் உடைகளை பார்த்து அவர்கள் எந்த மதம் என்பதை அடையாளம் காண்பதை தவிர்க்கவே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். இருப்பினும் அரசின் இந்த உத்தரவு இஸ்லாமிய சமூகத்தினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பிரான்ஸ் நாட்டின் பள்ளிகளில் பெரிய சிலுவைகள், யூதர்கள் அணியும் குல்லாக்கள், அல்லது இஸ்லாமியர்கள் அணியும் குல்லா போன்றவற்றை பள்ளிக்குள் மாணவர்களோ, ஆசிரியர்களோ யாரும் அணிந்துவரக்கூடாது என்கிற விதி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications