Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆள் கடத்தல்!" 300+ இந்தியர்களுடன் சென்ற விமானத்தில் விடிய விடிய விசாரணை! பிரான்ஸில் பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பிரான்ஸ்: சுமார் 300+ இந்தியர்களுடன் சென்ற விமானத்தில் ஆள்கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் போலீசார் விடிய விடிய விசாரணை செய்த பரபர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் படிப்பு, வேலை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இப்படி வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

 France Grounds Plane With 300 Indians and Questions 2 In Trafficking Probe

இதற்கிடையே இந்தியப் பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்றில் ஆள்கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறி அங்கே விடிய விடிய விசாரணை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆள் கடத்தல்: அதன்படி சுமார் 300+ இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா என்ற நாட்டிற்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் ஆள் கடத்தல் சம்பவம் நடந்ததாகச் சந்தேகத்தின் பேரில் தரையிறக்கிய பிரான்ஸ் போலீசார் இது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும் இந்திய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

303 இந்தியப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவாவிற்கு புறப்பட்ட சார்ட்டர் சிறப்பு விமானத்தில் ஆட் கடத்தல் நடப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், பிரான்ஸ் விமானத்தைத் தரையிறக்கியது. லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ340, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நிகரகுவாவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் சில காரணங்களுக்காக அது தரையிறங்கியது.

ரகசியத் தகவல்: அப்போது விமானத்தில் இருந்த சில பயணிகள் கடத்தப்பட்டவர்கள் என்று பிரான்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இப்போது இரண்டு பேரைக் கைது செய்த பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

விமானத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்த இந்தியா தூதரகம் அனுமதி அளித்ததாகவும் அதன் பின்னரே பிரான்ஸ் அதிகாரிகள் விமானத்தில் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்திய அதிகாரிகளும் அங்கே விரைந்துள்ளனர்.

இந்தியத் தூதரகம் சொல்வது எப்படி: இது குறித்து இந்தியத் தூதரக வட்டாரங்கள் கூறுகையில், "துபாயில் இருந்து நிகரகுவாவிற்கு சென்ற 303 பேர் கொண்ட விமானம் பிரான்ஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்தனர். தூதரகக் குழு எங்களிடம் அனுமதியைக் கோரியிருந்தனர். நாங்கள் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளனர்.

அமெரிக்கா அல்லது கனடாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயலவே இந்த பயணிகள் மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு செல்ல திட்டமிட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பிரான்சில் தரையிறங்கிய பிறகு, அவர்கள் முதலில் விமானத்திலேயே வைக்கப்பட்டனர், ஆனால் பின்னர் அவர்களுக்கு விமான நிலைய முனையக் கட்டிடத்தில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தலைநகர் பாரீஸிலிருந்து கிழக்கே 150 கி.மீ. தொலைவில் இருக்கும் சிறிய வாட்ரி விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்கிய நிலையில், அவர்களிடம் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விமானத்தில் இருந்த அனைவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்களில் இரண்டு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் பதில் அளித்தால் அவர்கள் மட்டும் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடிய விடிய விசாரணை: இரவு முழுக்க அந்த 303 இந்தியர்களும் விமான நிலையத்தில் தங்க வேண்டி இருந்தது. அவர்கள் மீண்டும் கிளம்ப எப்போது அனுமதிக்கப்படும் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. பிரான்ஸ் விதிகளின்படி சந்தேகத்தின்பேரில் ஒரு வெளிநாட்டுக் குடிமகனை நான்கு நாட்கள் வரை அந்நாட்டு போலீசாரால் காவலில் வைக்க முடியும்.

அந்நாட்டின் நீதிபதி ஒப்புதலுடன் மேலும் அதை 8 நாட்கள் நீட்டிக்க முடியும். அதன் பிறகும் நீதிபதி முன் ஆஜர் செய்து இதை நீட்டிக்க முடியும். இப்படி அதிகபட்சமாக 26 நாட்கள் ஒருவரைத் தடுத்து நிறுத்தி வைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+