நூற்றாண்டில் கூட இத்தனை பேர் சாகவில்லை.. ஒன்றரை ஆண்டுகளில் 230 பேரை தீவிரவாதத்திற்கு இழந்த பிரான்ஸ்
பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸில்தான் கடந்த ஓராண்டாக தீவிரவாத தாக்குதல் மிதமிஞ்சிய அளவுக்கு பெருகியுள்ளது. கடந்த வருடம், செப்டம்பரில், சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு பல்வேறு அசம்பாவிதங்களை அந்த நாடு சந்தித்து வருகிறது.
இதில் முக்கியமான சில தாக்குதல்களை பாருங்கள்:

2015ம் ஆண்டு, ஜனவரி 7: 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடியவர்கள் யூத மார்க்கெட் பகுதியில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஏப்ரல் 10: பாரீசில் பெண் ஒருவர், காரில் சுடப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொலையாளி என, அல்ஜீரியாவை சேர்ந்த ஐடி மாணவர் சையத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ்தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்த சையத் அகமது திட்டமிட்டிருந்தாராம்.
ஜுன் 26: ஒருவரை கொலை செய்து அவரது தலையை சுற்றி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கொடியை நட்டு வைத்திருந்த யாஷீன் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
நவம்பர் 13: பாரீசின் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகள் மோதிய கால்பந்து ஆட்டத்தை பிரான்ஸ் அதிபர் ஹாலாண்டேவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 9 பேர் பலியாகினர். தொடர்ந்து பட்சாலன் மண்டபத்தில் நடந்தப்பட்ட தாக்குதலுக்கு 130 பேர் பலியாகினர். இந்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், இரு தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டது.
ஜுலை 14: நைஸ் நகர உள்ளூர் திருவிழாவில் பங்கேற்க கூடியிருந்தோரை குறி வைத்து லாரி மூலம் தாக்குதல் நடத்தியதில், 80 பேர் உயிரிழந்தனர்.
இப்படியாக, சிறிதும் பெரிதுமாக நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு, கடந்த ஆண்டு முதல் இதுவரை 230க்கும் அதிகமானோரை பலி கொடுத்துள்ளது பிரான்ஸ். அதற்கு முந்தைய 100 ஆண்டுகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கையை கூட்டினால்கூட இந்த ஒன்றரை வருடத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கைதான் அதிகம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications