சீனா விரித்த "மாயவலை!" வசமாக சிக்கிய மாலத்தீவு! கையை பிசையும் அதிபர் முய்ஸு! இது என்ன புதுசா இருக்கு

Subscribe to Oneindia Tamil

மாலே: இத்தனை காலம் இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வந்த மாலத்தீவு அதிபர் முய்ஸு திடீரென தனது டோனை மாற்றி இருக்கிறார். இதற்கான காரணம் என்ன.. மாலத்தீவு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி தீவுகள் கூட்டம் தான் மாலத்தீவு.. இது குட்டி நாடாக இருந்தாலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் முக்கியமான இடத்தில் இது அமைந்துள்ளது. இதனால் இந்தியாவும் சரி சீனாவும் சரி மாலத்தீவுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வந்தனர்.

From China to India Maldives debt crisis is very huge than we think

கடந்த சில காலமாகவே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே மோசமான உறவு இருப்பது அனைவருக்கும் தெரியும். மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்ஸு பொறுப்பேற்றது முதலே அவர் இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார்.

முய்ஸு: முகமது முய்ஸுவை பொறுத்தவரை அவர் சீனா ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். இதன் காரணமாகவே அவர் தேர்தலில் வென்ற உடன் முதலில் சீனாவுக்குச் சென்று வந்தார். மாலத்தீவு வரலாற்றில் எப்போதும் முதலில் வெல்லும் அதிபர் இந்தியாவுக்குத் தான் வருவார். ஆனால், முஸ்ஸு அந்த வழக்கத்தை மாற்றி சீனாவுக்குச் சென்று வந்தார். ஆயுதங்களை வாங்கவும் சீனாவுடன் முக்கிய ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டார்.

மேலும், அங்கே உள்ள இந்திய வீரர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனால் இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு மோசமானது. ஆனால், இப்போது அவர் திடீரென டோனை மாற்றி இருக்கிறார். அங்கே உள்ளூர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த மாலத்தீவு அதிபர் முய்ஸு, தங்கள் நாட்டில் இந்தியா எண்ணில் அடங்காத திட்டங்களைச் செயல்படுத்தி இருப்பதாகவும் இந்தியா தங்களுக்கு நெருங்கிய நட்பு நாடு என்றும் தெரிவித்தார்.

என்ன காரணம்: மாலத்தீவு திடீரென இப்படி டோனை மாற்ற என்ன காரணம் என்ற சந்தேகம் வரலாம். வேறு என்ன கடன் தான். இந்தியாவுக்கு இந்தாண்டு இறுதிக்குள் மாலத்தீவுக்கு 400.9 மில்லியன் டாலர்களை கடனை திருப்பி செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், மாலத்தீவில் இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் அவர்களால் இந்தளவுக்குத் தொகையைத் திருப்பி அளிக்க முடியாது. இந்தியாவிடம் கூடுதல் அவகாசம் கேட்க முயலும் நிலையில், அதுவே மாலத்தீவு டோனை மாற்றக் காரணமாகும்.

அதேநேரம் மாலத்தீவு இந்தியாவிடம் வாங்கிய கடன் என்பது மிக மிகக் குறைவு. அவர்கள் உண்மையில் சீனாவிடம் தான் மிகப் பெரிய தொகையைக் கடனாக வைத்துள்ளனர். அங்கே கடந்த 2018 வரை 5 ஆண்டுகள் அதிபராக இருந்தவர் அதிபர் அப்துல்லா யாமீன். இவரும் முய்ஸுவை போலவே சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகவே அறியப்படுகிறார். இவர் அதிபராக இருந்த போது சீனாவிடம் கடன்களை வாங்கி குவித்தார்.

சீனாவின் மாய வலை: மாலத்தீவில் வளர்ச்சி திட்டங்களுக்காகச் சீனாவிடம் பெருந்தொகையைக் கடன் வாங்கியதே இப்போது மாலத்தீவுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. மாலத்தீவுக்கு மொத்தம் 3 பில்லியின் டாலர் அதாவது சுமார் ரூ.2500 கோடி வெளிநாட்டுக் கடன் இருக்கிறது. அதில் 42% சீனாவிடம் இருந்து பெற்ற கடன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடனும் மாலத்தீவின் கழுத்தை நெறித்து வருகிறது. மாலத்தீவு அதிபராக முய்ஸு பதவியேற்ற உடனேயே இந்த கடனை திருப்பி செலுத்தக் கூடுதல் கால அவகாசம் அளித்தது.

இருப்பினும் கடன் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இந்த கடன் காரணமாகவே புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்க முடியவில்லை என்று முய்ஸு கூறியிருந்தார். அந்தளவுக்கு வெளிநாட்டுக் கடன், குறிப்பாகச் சீனாவின் கடன் மாலத்தீவுக்குப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் இது தொடர்பாக மாலத்தீவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிட்டதக்கது.

தப்புமா: ஏற்கனவே பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகள் இதேபோல சீனாவிடம் பெற்ற கடன்களால் தான் பெரிய சிக்கலில் மாட்டின. இரு நாடுகளுமே திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. இதை உலக நாடுகள் சீனாவின் மாய வலை என்றே குறிப்பிடுகிறார்கள். அதன் பிறகு சர்வதேச நாடுகளின் உதவிக்குப் பின்னரே நிலைமை சற்று சீரடைந்தன. எங்கு இந்த லிஸ்டில் மாலத்தீவுமே சேர்ந்துவிடுமோ என்றும் அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+