மண்டியிட்டு... வாட்ச் பரிசளித்து.... சீன ரயிலில் ஒரு வித்தியாச ஓரினச்சேர்க்கை காதல் "விண்ணப்பம்"!
பெய்ஜிங்: சீனாவில் வித்தியாசமான முறையில் நடைபெற்ற ஓரினச் சேர்க்கை திருமணத்திற்காக ஒருவரின் காதல் வெளிப்படுத்தும் நிகழ்வு வீடியோ வைரலாக பரவிவருகிறது.
அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தினசரி ரயிலில் பயணம் செய்யும் மற்றொரு இளைஞருக்கு முன் மண்டியிட்டு அவருக்கு வாட்ச் பரிசளித்து தனது காதலை வெளிப்படுத்துகின்றார்.

"இங்கு இருக்கும் அனைவரையும் சாட்சியாக வைத்து என் காதலை வெளிப்படுத்துகின்றேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை வீடியோவாக வெளியிட்டுள்ள பயணிகளில் ஒருவர், "வழக்கம்போல இன்றும் வீட்டிற்கான என் பயணத்தின்போதுதான் இந்த வியப்பூட்டும் சம்பவத்தை நான் பார்க்க நேர்ந்தது" என்று தெரிவித்துள்ளார்.
கிட்டதட்ட 10,000 தடவைக்கு மேல் இணையத்தில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. "இது போன்ற காதல்களுக்கு தன்னம்பிக்கை தேவை... வாழ்த்துகின்றேன்" என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த ரயிலில் இருந்த மற்ற பயணிகள் இருவரையும் ஒன்று சேருங்கள் என்றும், முத்தமிட்டுக் கொள்ளுங்கள் என்றும், அந்த மற்றொரு இளைஞரை சரியென்று சொல்லச் சொல்லியும் கோஷமிட்டனர்.
ஆனால், அவர்கள் இருவராலும் சீனாவில் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏனெனில், ஓரினத் திருமணம் அங்கு சட்ட பூர்வமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
