மிகவும் மோசமாக தவித்து வருகிறோம்.. மானசரோவரிலிருந்து மாஜி காங். எம்.எல்.ஏ. காயத்ரி தேவி
மிகவும் மோசமாக தவித்து வருகிறோம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி தெரிவித்தார்.
Recommended Video

காத்மாண்டு: கனமழை மற்றும் கடுங்குளிரால் மானசரோவரில் மிகவும் மோசமாக தவித்து வருகிறோம் என்று காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி தெரிவித்தார்.
கைலாஷ் மற்றும் மானசரோவர் யாத்திரைக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றனர். வரும் வழியில் நேபாளத்தில் இவர்கள் சென்றுவிட்டு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவர்களுள் மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ காயத்ரி தேவி உள்பட பல்வேறு தமிழர்கள் தவித்து வருகின்றனர்.

வந்துவிட்டால்...
இதுகுறித்து காயத்ரிதேவி கூறுகையில் நாங்கள் மருத்துவ உதவி, தங்கும் இடமில்லாமல் தவித்து வருகிறோம். இந்நிலையில் மானசரோவர் மலையிலிருந்து மேலும் 400 பேர் நாங்கள் தங்கியுள்ள இடத்துக்கு வரவிருக்கிறார்கள். அவ்வாறு வந்துவிட்டால் இன்னும் கடினமாக இருக்கும்.

உணவின்றி...
சிலிகாட் என்ற பகுதியில் 750-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். அவர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் தங்க இடமின்றியும், உணவின்றியும் தவித்து வருகின்றனர். நாங்கள் இருக்கும் இடத்தில் 546 பேர் உள்ளனர்.

விமானம் மூலம் மீட்பு
நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் 3 உடல்கள் இருந்தன. அவர்கள் வடமாநிலத்தவர், கர்நாடக மாநிலத்தவர் மற்றும் கேரள மாநிலத்தவர் ஆவர். தற்போது அந்த 3 உடல்களும் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கோரிக்கை
கீழே உள்ள சிலிகாட்டில் இன்னும் 4 உடல்கள் இருப்பதாக கூறுகின்றனர். நேபாளில் உள்ள வானிலை இன்னும் சாதாரண நிலைக்கு வருவது போல் தெரியவில்லை. எனவே நேபாளத்திலிருந்து விமானம் வரும் வரை காத்திருக்காமல் வெளியுறவு துறை அமைச்சகம் தலையிட்டு எங்களை உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என்றார் காயத்ரி தேவி.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
காங்கிரஸை டம்மி ஆக்குதா தவெக? ஒரே நாளில் சொதப்பிய விஜய்யின் டெல்லி பயணம்! அப்ப பாஜக லேசில் விடாதே -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications