வந்தாச்சு.. 'டிஜிட்டல் காண்டம்'.. எப்படி வேலை செய்யும்? ஜெர்மனி நிறுவனம் சொல்றதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

பெர்லின்: செல்போன்களில் ஹேக்கர்கள் கைவரிசை காட்டி பயனர்களின் அந்தரங்க தருணங்களை அவர்களுக்கே தெரியாமல் ரெக்கார்ட் செய்யும் சம்பவங்களை தடுக்கும் வகையில், புதிய செயலி ஒன்றை ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆண்ட்ராய்டு கருவிகளில் மட்டும் தற்போது இந்த செயலி லாஞ்ச் செய்யப்பட்டுள்ளது. இது எப்படி செயல்படும்? இதை ஏன் டிஜிட்டல் காண்டம் என சொல்கிறார்கள் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன்களையே வைத்து இருக்கிறார்கள். ஸ்மார்ட் போன்களில் சில சமயம் ஹேக்கர்கள் ஊடுருவி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதும் நடைபெறுகிறது.

digital condom condom app technology

டிஜிட்டல் காண்டம்: சில நேரங்களில் ஸ்மார்ட் போன்களில் உள்ள மைக் மற்றும் கேமராவை ஆன் செய்து பயனர்களின் அந்தரங்கங்கள் விஷயங்களை கூட திருடும் நிலை இருக்கிறது. இதனை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஜெர்மனியை சேர்ந்த பில்லி பாய் என்ற ஹெல்த் நிறுவனம் காம்டம் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை டிஜிட்டல் காண்டம் என்றும் சொல்கிறார்கள்.

காம்டம் செயலி: அது ஏன் டிஜிட்டல் காண்டம் என சொல்கிறார்கள் என கேள்வி எழலாம். இது குறித்து காம்டம் செயலியை அறிமுகம் செய்துள்ள நிறுவனம் என்ன சொல்கிறது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.. இந்த டிஜிட்டல் காண்டம் (காம்டம்) செயலியானது ஸ்மார்ட்போன்ளில் சட்ட விரோத ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் ஆகாமால் தடுத்து விடுமாம். இதன் மூலம் பயனர்கள், தனிமையில் இருக்கும் போது ரகசியமாக ஹேக்கிங் செய்து யாரும் வீடியோ ரெக்கார்ட் செய்து விடுவார்களோ என அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லையாம்.

digital condom condom app technology

30 நாடுகளில்: புளுடூத் டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களை செயல் இழக்க வைத்து விடுமாம். அது மட்டும் இன்றி ரெக்கார்டிங்க் செய்ய ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றால் கூடுதல் பாதுகாப்பு லேயர் போல செயல்பட்டு தடுத்து விடுமாம். ஏற்கனவே 30 நாடுகளில் இந்த செயலி பயன்பாட்டில் இருப்பதாகவும், விரைவில் ஆப்பிள் போன்களிலும் கிடைக்கும் எனக் கூறியுள்ளது.

ஸ்மார்ட் போன்கள்: இந்த செயலியின் டெவலப்பர் ஆன பெலிஃப்அல்மீடியா கூறுகையில், "தற்போது ஸ்மார்ட் போன்கள் என்பது நமது உடலின் ஒரு பாகம் போலவே மாறிவிட்டது. ஸ்மார்ட் போன்களில் ஏகப்பட்ட முக்கிய தகவல்களை வைத்து இருக்கிறோம். எனவே உங்களையும், உங்களுக்கு தெரியாமல் நடக்கும் பதிவுகளையும் பாதுகாக்கும் விதமாக ஒரு செயலியை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்த செயலி, புளூடூத் வழியாக கேமரா மற்றும் மைக்குகளை பிளாக் செய்துவிடும்" என்றார்.

எப்படி செயல்படும்?: இது எப்படி செயல்படும் என்றால், இந்த செயலியை வைத்து இருக்கும் யூசர்கள், தனிமையில் இருக்க செல்லும் போது இந்த செயலியை ஆக்டிவேட் செய்தால் போதும். இந்த செயலி உடனடியாக உங்களின் ஸ்மார்ட் போன் கேமரா மற்றும் மைக்ரோன் செயல்பாடுகளை முடக்கி விடும். யாரும் ஹேக் செய்து ரெக்கார்டிங் செய்ய முடியாது. இதுபோன்ற முயற்சிகள் நடந்தாலும் உடனடியாக செல்போனில் நீண்ட அலாரம் ஒலித்து அலார்ட் செய்துவிடும்.

நெட்டிசன்கள் கருத்து: ஒரே நேரத்தில் பல ஸ்மார்ட் போன்களையும் இது கண்ட்ரோல் செய்யும் வசதி உள்ளதாம். நெட்டிசன்கள் இது பற்றி கூறுகையில், "இதுதான் டிஜிட்டல் காண்டமா? ரொம்ப காமெடியா இருக்கு" என பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் கூறுகையில், "மூட்டை பூச்சியை கொல்லும் நவீன இயந்திரம் என்பது போல உள்ளது" என ஜாலியாக கலாய்த்து இருக்கிறார்கள். சில நெட்டிசன்கள் தற்போதைய டிஜிட்டல் யுகத்திற்கு இதுபோன்றவை தேவைதான் எனவும் பதிவிட்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+