ஜெர்மனி விமானத்தை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கி பயணிகளை கொன்ற துணை விமானி
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ் திட்டமிட்டே விபத்துக்குள்ளாக்கி அதில் இருந்த அனைவரையும் கொன்றுள்ளார்.
ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானியான ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதை அவர் திட்டமிட்டு செய்து விமானத்தில் இருந்த 149 பேர் பலியாக காரணமாக இருந்துள்ளார்.
துணை விமானி தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாக்கிவிட்டார்.

விமானம்
கேப்டன் கழிவறைக்காக விமானி அறையில் இருந்து வெளியே சென்ற நேரத்தில் லுபிட்ஸ் விமானத்தை கீழ் நோக்கி வேகமாக செலுத்தியுள்ளார்.

கம்ப்யூட்டர் சிஸ்டம்
விமானம் வழக்கத்திற்கு மாறாக அபாய வழியில் செல்வதை தடுக்கும் கம்ப்யூட்டர் சுவிட்சை லுபிட்ஸ் ஆப் செய்து விட்டு 36 ஆயிரம் அடியில் பறந்த விமானத்தை வேகமாக தரை நோக்கி செல்ல வைத்துள்ளார்.

நொறுங்கியது
அவ்வளவு உயரத்தில் இருந்து விமானம் வேகமாக தரை நோக்கி வந்து மலை மீது மோதியதில் அது ஆயிரம் துண்டுகளாக சிதறியது. லுபிட்ஸ் விமானத்தை ஆல்ப்ஸ் மலையில் தான் மோத வேண்டும் என திட்டமிடவில்லை. கேப்டன் அந்நேரம் விமானி அறையில் இருந்து வெளியே சென்றதால் லுபிட்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிவிட்டார்.

லுபிட்ஸ்
லுபிட்ஸ் பதின்வயதில் இருக்கையிலேயே விமானி உரிமம் வாங்கிவிட்டார். அவர் 2013ம் ஆண்டு ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தை நடத்தும் லுப்தான்ஸாவில் சேர்ந்தார். அவர் 630 மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

சில்க் ஏர் போயிங்
1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற சில்க் ஏர் போயிங் 737 விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 97 பேர் பலியாகினர். அது அமெரிக்கா தயாரித்த விமானம் என்பதால் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மையம் விபத்து குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையில் விமானி ஒருவர் வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்குள்ளாகியது தெரிய வந்தது.

வித்தியாசம்
சில்க் ஏர் போயிங் மற்றும் எகிப்து விமானங்கள் திடீர் என்று படுவேகத்தில் ஆறு மற்றும் கடலில் பாய்ந்துள்ளன. ஆனால் ஜெர்மன்விங்ஸ் விமானம் 36 ஆயிரம் அடியில் இருந்து வேகத்தை குறைத்து மலை மீது மோத 10 நிமிடங்கள் ஆகியுள்ளது. இதன் மூலம் இதற்கு முழு காரணம் துணை விமானி தான் என்பது தெரிய வந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications