பூமியை நெருங்கும் ராட்சசன்.. இன்றே கடைசி நாளாக கூட இருக்கலாம்! நாசா கொடுத்த வார்னிங்
வாஷிங்டன்: விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், இன்று சுமார் 1,400 அடி கொண்ட விண்கல் ஒன்று பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாகவும், இதன் பாதையில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட பேராபத்தில் நாம் சிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பொதுவாக விண்கற்கள் சிறிய அளவில்தான் இருக்கும். ஆனால் 3% விண்கற்கள் வழக்கத்தை விட பெரியதாக இருக்கும். இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் '2008 DG5' என்கிற விண்கல் இந்த 3%-ஐ சேர்ந்தது. அதாவது அளவில் மிகப்பெரியது. ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் எனில், அமெரிக்க கால்பந்து மைதானத்தை விட இது 3 மடங்கு நீளமானது. பிரபலமான 'எம்பயர் ஸ்டேட்' கட்டிடத்தைவிட உயரமானதாகும். இந்த சைஸ்தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை.

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கத்தான் செய்கிறது. நாம் எல்லாவற்றையும் பார்த்து பயப்படுவதில்லை. ஆனால் 500 மீ சைஸும், 75 லட்சம் கி.மீக்கு நெருக்கத்தில் வரும் விண்கற்கள்தான் நமக்கு ஆபத்தானவையாகும். அப்படி பார்த்தால் இன்று பூமியை நெருக்கமாக கடக்கும் 2008 DG5 எனும் விண்கல் 426.72 மீட்டர் அளவுதான் இருக்கிறது. ஆனால் தூரம் வெறும் 35 லட்சம் கி.மீ. பூமிக்கும் நிலவுக்கும் இருக்கும் தூரத்தை விட 9 மடங்கு அதிகம்.
ஒப்பீட்டளவில் இது மிக குறைவான தூரமாகும். ஏனெனில் இந்த தூரத்தில் பயணிக்கும் விண்கற்கள் பூமியின் ஈரப்பு விசையால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இந்த விண்கல் பாதையில் சிறிய மாற்றம் நடந்தாலும், பூமியில் பேரழிவு ஏற்படும். இதற்கு முன்னர் கடந்த 1908ம் ஆண்டு 130 மீ சைஸ் கொண்ட விண்கல் ஒன்று பூமி மீது மோதியிருந்தது. இதனால் ஏற்பட்ட காட்டு தீயில் சுமார் 8 கோடி மரங்கள் அழிந்தன.
அப்படியெனில் 426.72 மீ அளவுக்கொண்ட '2008 DG5' விண்கல் மோதினால் என்ன ஆகும்? விண்கல் விழுந்த இடத்திலிருந்த 130 கி.மீ பரப்பளவுக்கு எதுவும் மிஞ்சியிருக்காது. சென்னையில் விண்கல் விழுந்தால் வேலூர், திருப்பதி, விழுப்புரம் வரை புல் பூண்டு கூட இருக்காது. மொத்தமும் அழிந்துவிடும். சுமார் 6.1 ரிக்டர் என்கிற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படும். பூமியில் உள்ள எரிமலைகள் உடனடியாக வெடிக்க தொடங்கும்.
எரிமலைகள் மொத்தமாக ஒரே நேரத்தில் வெடித்தால், மொத்த உலகத்தையும் கரும்புகை சூழ்ந்து, சூரிய ஒளி உள்ளே வரவிடாமல் செய்துவிடும். இதனால் முதலில் தாவரங்களும், அதை தொடர்ந்து மற்ற உயிர்களும், இறுதியாக மனிதர்களும் கூட அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது. பூமி கடும் பனிகாலத்தை நோக்கி செல்லும். அடுத்த 50-100 ஆண்டுகள் வரை பூமியின் வெப்பநிலை குறையும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆனால் இப்போது வரை விண்கல் மோதுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்பதால், அச்சப்பட வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications