ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க... தன் முகத்தில் தீவைத்துக் கொண்ட 8 வயது சிறுமி!
ஜெர்மனி: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தனது பெண்மையைக் காப்பாற்றிக் கொள்ள சிறுமி ஒருத்தி தனக்குத்தானே தீவைத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர்.
ஈராக்கின் வடக்கு பகுதியில் வசித்து வரும் ஆண்களைக் கொன்று அவர்களின் மனைவி மற்றும் பெண்களை தங்களின் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

பெண்கள் விற்பனைக்கு:
அதன் பின் சில காலம் கழித்து அந்த பெண்களை வேறு ஒருவருக்கு விற்று விடுகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் தற்போது அவர்களிடம் அடிமைகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கிட்டதட்ட 1,100 பெண்கள் மற்றும் சிறுமிகள் மீட்கப்பட்டு ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலமுறை பலாத்காரம்:
அப்படி மீட்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் ஜான் லான் கிசிலான் இது பற்றி கூறும்போது, ''ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினரிடம் சிக்கி நிறைய பெண்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அந்த வகையில், 8 வயது சிறுமி ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு விற்கப்பட்டு இருக்கிறாள்.

தீவைத்துக் கொண்ட சிறுமி:
அதுபோல் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த ஒரு சிறுமி தனது கற்பை காப்பாற்றிக்கொள்ள தனது உடல் மற்றும் முகத்தில் தீ வைத்து கொண்டுள்ளார். இதன் காரணமாக தீவிரவாதிகள் தன்னை விட்டுவிடுவார்கள் என அவர் நினைத்துள்ளார்.

தொடர்ச்சியான சிகிச்சை:
அந்த சிறுமி 80 சதவீத தீக்காயத்தால் பாதிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் பல பெண்களும் சிறுமிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications