ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்து வெளியே தூக்கி வீசப்பட்ட 13 வயது சிறுமி பலி : தாய்லாந்தில் பயங்கரம்
பாங்காக்: ஓடும் ரயிலில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தூக்கி வெளியே வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்து நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களில் ஒன்றான சுரட் தனி-யில் நோய்வாய்பட்டிருக்கும் பாட்டியை பார்த்து விட்டு கடந்த சனிக்கிழமையன்று ரயிலில் தலைநகர் பாங்காக்கிற்குத் திரும்பிக் கொண்டிருந்தது ஒரு குடும்பம். அதில் 13 வயது சிறுமியும் ஒருவர் இருந்தார்.
இரவு தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமியை மர்ம நபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர். காலையில் கண் விழித்து பார்த்த குடும்பத்தார் சிறுமி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை கிரிகான் மாகாணம், ப்ரன்புரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் உடல் முழுக்க காயங்களுடன் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக போலிசாருக்குத் தகவல் கிடைத்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அச்சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.
இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே ஊழியர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் தாய்லாந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் இதைப்போன்ற சம்பவங்கள் நடைபெறாவண்ணம் தடுக்க, இக்குற்றத்திற்கு கடுமையான தண்டனையை கொண்டு வர வேண்டும் என்று அரசை வலியுறுத்தி ஒரே நாளில் ‘ஆன்லைன்' போராட்டத்தில் 15 ஆயிரம் கையொப்பங்கள் குவிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications