நிர்வாண டான்ஸ் ஆட தயார்.. கிறுகிறுக்க வைத்த கவர்ச்சி நடிகை ஞாபகமிருக்கா?.. வழக்கில் முக்கிய தீர்ப்பு
கவர்ச்சி நடிகை கொலை வழக்கில் சகோதரருக்கு ஆயுள் வழங்கப்பட்டது
இஸ்தான்புல்: 6 வருட காலமாக பரபரப்பாக பேசப்பட்ட நடிகை கொலை வழக்கில் பாகிஸ்தான் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த 6 வருடத்துக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்ட கிரிமினல் வழக்கு குவான்டீல் பலோச் கொலை வழக்கு.. இவர் ஒரு கவர்ச்சி நடிகை.. பவுசியா அசிம் என்பதுதான் இவரது இயற்பெயர்.. சினிமாவுக்காக அந்த பெயரை மாற்றி கொண்டார்..
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரை சேர்ந்தவர்.. 26 வயதாகிறது.. மாடலிங்கும் செய்வார்.. தன்னுடைய கவர்ச்சிகரமான போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிடுவது இவரது வழக்கம்.

ஆபாச போட்டோ
போட்டோக்களை பதிவிட்டாலும் சரி, வீடியோக்களை பதிவிட்டாலும் சரி, அது உடனே பரபரப்பாகிவிடும்.. சர்ச்சைகளையும் தாங்கி வரும்.. ஆனாலும், நடிகை தன்னுடைய கவர்ச்சி படங்களை தொடர்ந்து பதிவிட்டே வந்தார். ஒருமுறை டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியை பாகிஸ்தான் அணி வெல்லும் என்று சேலஞ்ச் செய்திருந்தார்.. அதுமட்டுமல்ல, பாகிஸ்தான் அணி வெற்றி பெறும்போது டிரஸ் இல்லாமல் டான்ஸ் ஆடவும் தயார் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர்..

நிர்வாண நடனம்
அப்படி வெற்றி பெற்றுவிட்டால், அப்ரிடி என்ன சொன்னாலும் செய்ய தயார் என்று அறிவித்தவர்.. ஆனால், அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டது.. இதனால் அதிர்ந்து போன கவர்ச்சி நடிகை, அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிதியை திட்டி தீர்த்து ஒரு வீடியோவை வெளியிட்டார்.. தன்னை நிர்வாணமாக டான்ஸ் ஆடாமல், அப்ரிடி தோல்வியடைய செய்துவிட்டாரே என்று புலம்பினார்.. அந்த வீடியோவும் பரபரப்பானது.

கவர்ச்சி நடிகை வீடியோ
அதற்கு பிறகு, முன்னாள் கேப்டன் இம்ரான்கானை காதலிப்பதாகவும் அவரைதான் கல்யாணம் செய்ய போவதாகவும், அவருக்காகவே காத்திருப்பதாகவும் அறிவித்தார்.. இதுவும் பரபரப்பானது.. ஆனால், இது எல்லாவற்றையும் விட இன்னொரு ஹைலைட் வெளிவந்தது.. இவ்வளவு அறிவிப்பு வெளியிட்ட இந்த கவர்ச்சி நடிகை ஏற்கனவே கல்யாணம் ஆனவர்.. அதுவும் 3 முறை கல்யாணம் ஆனவர்.. 7 வயதில் ஒரு மகன் இருப்பதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.. ஆனால் 3 பேரையுமே டைவர்ஸ் செய்துவிட்டாராம்.

படுகொலை
இந்த அளவுக்கு பரபரப்பை தந்த நடிகையை, அங்குள்ள பழமைவாதிகள் எதிர்த்தனர்.. பலமுறை நேரடியாக கொலை மிரட்டலும் விடுத்தனர். நடிகைக்கு 2 சகோதரிகள், 5 சகோதரர்கள் இருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், சொந்த தம்பி வாசிம் அகமதுவுடன் நடிகைக்கு ஏதோ தகராறு ஏற்பட்டது.. கடந்த 15-7-2016- அன்று நடிகை நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது, அவரது ரூமுக்குள் நுழைந்த வாசிம், அக்காவின் கழுத்தை நெரித்து கொன்றே விட்டார்.. இந்த கொலை குறித்த வழக்கு விசாரணை ஆரம்பமானது..

வாக்குமூலம்
அதிக அளவு கவர்ச்சியாக வீடியோ வெளியிட்டு, ஆபாசமாக கருத்துக்களை சொல்லி, குடும்ப மானத்தையே வாங்கிவிட்டார் என்ற கோபம் தம்பிக்கு நீண்ட நாட்களாகவே இருந்ததாம்.. அதனால்தான் அக்காவை கொன்றதாக போலீசில் வாசிம் வாக்குமூலம் தந்தார்.. இத்தனை நாட்களும் இந்த வழக்கு, முல்தான் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.. மொத்தம் 35 சாட்சிகளிடம் விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

கவர்ச்சி நடிகை
குவான்டீல் பலூச்சின் தம்பி வாசிமுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார் நீதிபதி இம்ரான் ஷபி.. இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த குவான்டீல் பலூச்சின் இன்னொரு சகோதரர், மேலும் சிலரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்... 6 வருடகாலமாக பாகிஸ்தானையே அதிர்ச்சியடைய செய்த ஆணவ கொலை வழக்கு, இப்போது முடிவுக்கு வந்துள்ளது..!












Click it and Unblock the Notifications