சீனா இப்படி பாடாய் படுத்துதே.. புலம்பும் டிரம்ப்! விஷயம் இதுதான்.. இந்தியாவுக்கும் சிக்கல்
பெய்ஜிங்: மின்னணு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி துறை, மருத்துவ உபகரணங்கள், விண்வெளி ஓடங்கள், பாதுகாப்புத்துறைக்கான ஆயுதங்கள் மற்றும் தொழிற்துறை என அனைத்தும் 'அரிய காந்தத்தை' நம்பிதான் இருக்கிறது. ஆனால், இந்த காந்தங்களுக்கு உலகமே சீனாவை நம்பித்தான் இருக்கிறது. சீனா சப்ளையை நிறுத்தி வைத்திருக்கிறது. இதுதான் இப்போது பிரச்சனை.
அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனா 'அரிய காந்தம்' ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல இடங்களில் இந்த காந்தம் கிடைத்தாலும், இதை பிரித்தெடுக்கும் வித்தையையும், அதற்கான தொழில்நுட்பத்தையும் அதிக அளவில் கொண்டிருப்பது சீனா மட்டும்தான். தற்போது சீனாவின் இந்த பிடிவாதம், உலகம் முழுவம் செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

எதற்கெல்லாம் அரிய காந்தங்கள் தேவை?
- கணினி ஹார்ட் டிஸ்க்
- மொபைல், டேப்லெட், ஸ்பீக்கர்கள்
- ஹெட்போன், இயர்பட்
- காற்றாலைகள்
- மின்சார வாகனங்கள்
- MRI ஸ்கேனர்
- ஆபரேஷன் கருவிகள்
- செயற்கைக்கோள்
ஏவுகணை
எலக்ட்ரிக் மோட்டார்ஸ்
எவ்வளவு முக்கியம் என்பதற்கு உதாரணம்
இது எல்லாவற்றிற்கும் 'அரிய காந்தங்கள்' தேவை. உதாரணத்திற்கு காற்றாலைக்கு இந்த காந்தங்கள் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம். காற்றாலைகள் காற்றில் சுற்றும்போது அது மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. முன்னாடியெல்லாம் இதில் மின்னணு காந்தங்கள் பொருத்தப்பட்டிருந்தன. சிறிய அளவில் மின்சாரம் கொடுத்து, அதில் காந்த புலத்தை ஏற்படுத்தி பெரிய அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்தார்கள். ஆனால் சிறிய அளவு மின்சாரம் கொடுப்பது தலைவலியாக உருவெடுத்தது.
இவ்வளவு பயன்கள் இருக்கா!
காடு, மேடுகளில் மின்சாரத்திற்காகத்தான் காற்றாலையை நிறுவுகிறோம். அங்கேயும் கரண்ட் தேவைப்படுகிறது எனில், காடுகளுக்கு நடுவே மின்சாரத்திற்கு எங்கு போவது? இதற்கு மாற்றாகத்தான் அரிய காந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் காந்தப்புலம் நிரந்தரமாக இருக்கும். எனவே மின் உற்பத்திக்கு மின்சாரம் தேவையில்லை. சாதாரண காற்றலையைவிட, அரிய காந்தம் பொறுத்தப்பட்ட காற்றாலை 30% அதிக உற்பத்தி திறனை கொடுக்கும். பராமரிப்பு செலவுகளும் குறைவு.
அமெரிக்கா உட்பட உலக நாடுகள் அச்சம்
இப்படி எல்லா துறைகளிலும் இந்த காந்தங்களின் தேவை இருக்கிறது. இதில் மொத்த தேவையில் 99% சீனாதான் நமக்கு சப்ளை செய்து வந்தது. தற்போது சப்ளையை சீனா நிறுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் தொழில்துறைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா இதனால் பெரிய இழப்பை சந்திக்க வேண்டி வரும். இந்தியாவும்தான்.
நிலைமையை சரி செய்ய இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருவதாக ராய்டர்ஸ் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. இந்த மாத தொடக்கத்தில், ஜப்பான் தூதுக்குழு சீனாவுக்கு வர இருக்கிறது. அதனை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் தூது குழுவும் வர உள்ளது.
இந்தியாவுக்கும் சிக்கல்
இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ஆட்டோமொபைல் சந்தையை கொண்டிருக்கிறது. அநேகமாக இந்த மாத்தில் நாடு முழுவதும் கார் உற்பத்தி முழுமையாக நின்றுவிடும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மாருதி சுசுகி நிறுவனம், ஜிம்னி, ஃபிராங்க்ஸ் மற்றும் வரவிருக்கும் இ-விட்டாரா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு சீனாவைத்தான் நம்பியிருக்கிறது.
இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அரிய காந்தங்கள் இருக்கின்றன. இதனை பிரித்தெடுக்கும பணியை இன்று தொடங்கினால் கூட, தேவையை பூர்த்தி செய்ய குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications