இனியும் தாமதிக்க நேரமில்லை... தடுப்பூசிகள் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றலாம்.. உலக சுகாதார மையம்
ஜெனீவா: சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம் ஐந்து கோடி பேரின் உயிர்களைக் காக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகமே இன்னும் கொரோனா பெருந்தொற்றின் கொடிய பிடியிலிருந்து மீளவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனாவுக்கு மட்டுமே உலக நாடுகள் அதிகம் முக்கியத்துவம் அளித்து வருவதால் அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற பல உயிருக்கு ஆபத்தான நோய்களை நாம் தவிர்க்க வேண்டுமானால், ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா தவிர மற்ற வழக்கமான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும், இதன் மூலம் 2030 வரை ஐந்து கோடி பேரைக் காக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ளும் GAVI அமைப்பின் தலைவர் கூறுகையில், ஏற்கனவே இந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல கோடி குழந்தைகளுக்கு அடிப்படை தடுப்பூசிகள்கூட செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பெருந்தொற்று நாம் கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொண்ட பணிகளை ஆபத்தில் தள்ளியுள்ளது. இனி நமக்குத் தாமதிக்க நேரமில்லை. இன்னும் தாமதம் அதிகமானால் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications