அதள பாதாளத்தில் தங்கம்.. "இது" மட்டும் நடந்தால்.. அப்றோம் தங்கம் விலையே மொத்தமாக சரிஞ்சுடும்
பெர்லின்: இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் தங்கத்திற்குத் தனி மவுசு இருக்கவே செய்கிறது. இதுவரை தங்கம் எப்படி பூமியின் மேற்பரப்பை அடைகிறது என்பது குறித்து ஆய்வாளர்களுக்குத் துல்லியமாகத் தெரியாமல் இருந்தது. இதற்கிடையே ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் சில முக்கிய விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
தங்கம் குறித்து உலகெங்கும் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தங்கத்தைச் செயற்கையாக உற்பத்தி செய்ய முடியுமா.. தங்கம் எப்படி பூமியில் வந்திருக்கும் எனப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹவாய் பாறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தங்கம் குறித்து சில புதிய விஷயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதள பாதாளத்தில் இருந்து தங்கம்
அதாவது சுமார் 3000 கிமீ அடியில் பூமியின் மையப்பகுதி அமைந்துள்ளது. பூமியின் மையம் கொதிக்கும் உலோக பந்து போல இருக்கும். இதற்கிடையே அந்த உலோக பந்தில் இருந்து மெல்லப் பூமியின் மேற்பரப்பிற்குத் தங்கம் கசிந்து கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இதற்கு முன்பு பூமியின் மையப்பகுதி என்பது பூமியின் மேற்பரப்பில் இருந்து தனித்து இருக்கும் என்றும் இரண்டிற்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காது என்றுமே ஆய்வாளர்கள் கருதினர். ஆனால், இப்போது புதிய ஆய்வில் இரண்டும் தனித்தனியாக இல்லை. பூமியின் மையப்பகுதிக்கும் மேற்பரப்பிற்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கசியும் தங்கம்
தங்கம் உட்பட விலைமதிப்பற்ற பல உலோகங்களைப் பூமியின் மையப்பகுதியில் இருந்தே மேன்டலுக்குள் (பூமியின் மேற்பரப்பிற்கும் மையப்பகுதிக்கும் இடையே உள்ள பகுதி) கசிகிறது. அவை இறுதியில் எரிமலை வெடிப்பு உள்ளிட்டவை மூலம் பூமியின் மேற்பரப்பை அடைவதாகச் சமீபத்தில் நடந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள கோட்டிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது தொடர்பான ஆய்வை நடத்தினர். ஹவாயிலிருந்து வரும் எரிமலை பாறைகள் குறித்து அவர்கள் விரிவான ஆய்வை மேற்கொண்டனர். புதிதாக உருவாக்கப்பட்ட அல்ட்ரா-சென்சிட்டிவ் ஐசோடோபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வை நடத்தினர். அப்போது எரிமலை வெடிப்பில் கிடைத்த பாறைகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ருத்தேனியம் ஐசோடோப் இருப்பது கண்டறியப்பட்டது.
புதிய கண்டுபிடிப்பு
இந்த குறிப்பிட்ட ஐசோடோப் பூமியின் மையப்பகுதியில் தான் அதிகமாக இருக்கும். அதாவது ஹவாய் எரிமலை வெடிப்பில் இருந்து கண்டறியப்பட்ட எரிமலை பாறைகள் கிரகத்தின் மையப்பகுதியில் இருந்தே தோன்றியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.
இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட கோட்டிங்கன் பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் நில்ஸ் மெஸ்லிங் கூறுகையில், "ஆய்வு முடிவுகள் முதலில் வந்தபோது, எங்களுக்குத் தங்கமே கிடைத்துவிட்டது போல இருந்தது. தங்கம் உள்ளிட்ட பிற விலைமதிப்பற்ற உலோகங்கள் பூமியின் மைய பகுதியில் இருந்து பூமியின் மேன்டலுக்கு கசிவது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
99.99% தங்கம்
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மையம் உருவாகி இருப்பதாக ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள். பூமியில் மொத்தம் இருக்கும் தங்கத்தில் 99.999% தங்கம் அங்கு தான் இருக்கிறது. இவை பூமியில் சுமார் 3,000 கிலோமீட்டருக்கு கீழ் பல திடமான பாறைக்கு அடியில் இருக்கிறது. இவற்றை அவ்வளவு சீக்கிரம் யாராலும் அணுக முடியாது. இதற்கிடையே சூப்பர் ஹீட் மேன்டில் மூலம் பூமியின் ஆழத்தில் உள்ள பொருட்கள் மேற்பரப்பிற்கு வருவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாகப் பேராசிரியர் மத்தியாஸ் வில்போல்ட் கூறுகையில், "பூமியின் மையப் பகுதி என்பது முன்பு நாமெல்லாம் நினைத்தது போலத் தனிமைப்படுத்தி இல்லை. பூமியின் மையப் பகுதியில் உருவான பல நூறு குவாட்ரில்லியன் மெட்ரிக் டன் பாறைகள், மேன்டில் வழியாகப் பூமியின் மேற்பரப்பை அடைவது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது" என்றார்.
தங்கம் விலை தாறுமாறாகச் சரியலாம்
இந்த ஆய்வு இரண்டு வகைகளில் முக்கியம்.. முதலில் பூமியின் மேற்பரப்பில் எப்படி தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற உலோகங்கள் வருகிறது என்பதைக் கண்டறிய உதவுகிறது. மேலும், தங்கம் இப்போது பூமியில் குறைந்த அளவே கண்டறியப்படுவதால் தான் அதன் விலை அதிகமாக இருக்கிறது.
இப்போது பூமியின் மையப்பகுதியில் அதிக தங்கம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள நிலையில், அது திடீரென வேகமாக வெளியேற ஆரம்பித்தால் நமக்கு அதிகளவில் தங்கம் கிடைக்கும்.. இதன் மூலம் அதன் விலையும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதற்கான வாய்ப்பு எத்தனை சதவிகிதம் என்பது குறித்து ஆய்வாளர்கள் எந்தவொரு கருத்தும் கூறவில்லை என்ற போதிலும் இதுவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.
-
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன்












Click it and Unblock the Notifications