அமெரிக்காவில் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது
சிகாகோ: அமெரிக்காவில் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கு சிகாகோ உலக தமிழ்ச்சங்கம் சார்பாக 'தங்க தமிழ் மகன்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக கடந்த 8ம் தேதி காலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன் அவரது மகனும் தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திராத் குமார், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஓ.பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் நிகழ்ச்சியில் நேற்று துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். விழாவில் சிகாகோ உலக தமிழ்ச்சங்கம் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு 'தங்க தமிழ் மகன்' விருது வழங்கி கௌரவித்தது.

நவம்பர் 13 மற்றும் 14-ல் வாஷிங்டன்னில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். நவம்பர் 17ம் தேதி அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications