Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்கு குட்நியூஸ்.. வங்கதேசத்தில் எதிரிகளுக்கு விழும் சம்மட்டி அடி.. நாடு திரும்பிய தாரிக் ரஹ்மான்.. யார் இவர்?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அங்குள்ள மாணவர் அமைப்பினர், மாணவர் கட்சியினர், பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி மத அடிப்படைவாத கட்சிகள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் 20 ஆண்டுகளுக்க பிறகு வங்கதேசத்துக்கு அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் திரும்புகிறார். அவரது வருகை நம் நாட்டுக்கு சாதகமாக பார்க்கப்படும் நிலையில் அவரது பின்னணி பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

நம் நாட்டின் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கதேச பிரதமராக அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா இருந்தவைர உறவு சிறப்பாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. இதனால் ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவராக உள்ளார். பாகிஸ்தானுடன் சேர்ந்து நம்மை சீண்டி வருகிறார். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களை துன்புறுத்தி வருகிறார்கள்.

இது போதாது என்று ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்த மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் தனியாக கட்சி தொடங்கி செயல்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களும் நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதோடு, வடகிழக்கு மாநிலங்களை பிரிப்பதாகவும், இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளுக்கு அடைக்கலம் கொடுப்போம் என்று கூறி வருகின்றனர்.

இதற்கிடையே தான் தற்போது மீண்டும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்துள்ளது. பிப்ரவரி மாதம் 12ம் தேதி அங்கு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வன்முறை வெடித்தது. தலைநகர் டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) என்ற மாணவர் தலைவர் வேட்பாளராக களமிறங்கினார்.

‛இன்கிலாப் மஞ்சா' என்ற மாணவர் போராட்டக் குழுவை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை முன்னின்றி வழிநடத்தியவர்களில் ஒருவர். இதற்கிடையே தான் முகமூடி அணிந்த நபர் பிரசாரத்தின்போது அவரை சுட்டு கொன்றார். இதனால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மேலும் இந்து இளைஞர் தீவைத்து எரித்து கொல்லப்பட்டார்.

அதுமட்டுமின்றி ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாகவும் சிலர் ஆதாரமின்றி பேசி வருகின்றனர். இதனை முற்றிலுமாக நம் நாடு மறுத்துள்ளது. மேலும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் நாளுக்கு நாள் நம் நாட்டின் மீது அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இருநாடுகளின் உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் தற்போது வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு குட்நியூஸ் கிடைத்துள்ளது. அதாவது வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசத்துக்கு திரும்பி உள்ளார். கலிதா ஜியா பிஎன்பி கட்சியை நடத்தி வருகிறார். இவர் வங்கதேசத்தில் 2 முறை பிரதமராக இருந்துள்ளார். 1991 முதல் 1996 வரையும், 2001 முதல் 2006 வரையும் அவர் பிரதமராக இருந்தார். இந்த வேளையில் முக்கிய முடிவுகளை மகன் தாரிக் ரஹ்மான் தான் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதன்பிறகு வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் நடந்த உடன் தாரிக் ரஹ்மான் வெளிநாடு சென்றார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் தற்போது நாடு திரும்பி உள்ளார். இது வங்கதேசத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வங்கதேசத்தை கைப்பற்ற மாணவர் அமைப்பினர் மற்றும் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி எனும் மதஅடிப்படைவாத கட்சி திட்டமிட்டு வருகின்றன. இதற்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்தை எடுத்து கொண்டால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தான் நம் நாட்டுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் அந்த கட்சி தேர்தலில் போட்டியிட தடை போடப்பட்டுள்ளது. இது நம் நாட்டுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் உடல்நலக்குறைவால் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இதனால் இரு பெரிய கட்சிகளையும் ஒதுக்கி மாணவர் அமைப்பினர் எளிதாக வெற்றி பெற்று வங்கதேசத்தை கைப்பற்றலாம் என்று கணக்கு போட்டடனர்.

இதற்கு தான் தற்போது சிக்கல் வந்துள்ளது. கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்ப உள்ளார். இதன்மூலம் கட்சியின் பிரசார பணிகளை மேற்கொள்ளும் வகையில் லண்டனில் இருந்து தாரிக் ரஹ்மான் அங்கு செல்கிறார். இது நம் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

லண்டனில் இருந்து டாக்கா விமான நிலையத்தில் வந்திறங்கும் தாரிக் ரஹ்மானுக்கு ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பு வழங்க உள்ளனர். சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டு அவரை விமான நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளனர்.இந்த முறை தாரி ரஹ்மான் போகுரா-6 (சதர்) தொகுதியிலும், பிஎன்பி கட்சியின் தலைவரான ஜியா தனது சொந்த தொகுதியான போகுரா-7 (கப்தாலி-ஷஜஹான்பூர்) தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வங்கதேசத்தில் தற்போது நம் நாட்டுக்கு வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் மற்றும் பாகிஸ்தானின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் ஜமாத் இ இஸ்லாமி மத அடிப்படைவாத கட்சி ஆகியவை தான் பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதில் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை ஷேக் ஹசீனா தடை செய்தார். ஆனால் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு அந்த கட்சியின் மீதான தடையை இடைக்கால அரசு நீக்கியது. மேலும் ஜமாத் இ இஸ்லாமி, கலிதா ஜியாவின் கட்சியுடன் கூட்டணி வைத்து இருந்தது.

இப்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் நெருக்கம் காட்டி வருவதால் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி கூட்டணிக்கு ஏற்க மறுத்துள்ளது. அதுமட்டுமின்றி வெளியாகி வரும் கருத்து கணிப்புகளில் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி அதிக இடங்களில் வெல்லும் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அடுத்ததாக ஜமாத் இ இஸ்லாமி கட்சி 2வது இடம் பிடிக்கும்என்று கணிக்கப்பட்டுள்ளது. அதோடு டாக்கா பல்கலைக்கழக தேர்தலில் அந்த கட்சியின் மாணவர் பிரிவினர் வெற்றி பெற்றனர். இப்படியாக ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் அரசியல் எழுச்சி நம் நாட்டுக்கு பெரும் ஆபத்தாக பார்க்கப்படுகிறது.

அதேவேளையில் கலிதா ஜியா அவரது மகன் தாரிக் ரஹ்மான் பிரசாரத்தில் களமிறங்காத நிலையில் இப்படியான ரிசல்ட் வருகிறது. தற்போது தாரிக் ரஹ்மான் தனது தாய் கலிதா ஜியாவுக்கு பதில் கட்சியை வழிநடத்த உள்ளார். இதனால் ரிசல்ட் மாறும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் தாரிக் ரஹ்மானுக்கு நாடு முழுவதும் பிஎன்பி கட்சியினர் இடையே அதிக செல்வாக்கு உள்ளது.

அடிப்படையில் கலிதா ஜியாவும் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் தான். அதேபோல் பாகிஸ்தானையும் அவர் கிட்ட சேர்க்கவில்லை. ஆனால் தற்போது பிரதமர் மோடி, கலிதா ஜியாவின் உடல்நலம் குறித்து கவலை தெரிவித்தார். அதற்கு அந்த கட்சி நன்றி தெரிவித்தது. இது இருதரப்புக்கும் இடையே நல்லுறவுக்கான தொடக்க புள்ளியாக பார்க்கப்படுகிறது. இதனால் ஜமாத் இ இஸ்லாமி கட்சி அல்லது மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வங்கதேசத்துக்கு ஆட்சியை பிடிப்பதற்கு பதில் கலிதா ஜியாவின் பிஎன்பி கட்சி ஆட்சிக்கு வந்தால் அது நம் நாட்டுக்கு பாசிட்டிவ்வான ஒன்று தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+