For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நல்ல செய்தி வருகிறது.. இந்தியா - பாக் பற்றி டிரம்ப் சூசகம்.. பின்னணியில் வேலை பார்த்த உலக நாடுகள்!

இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியா - பாக் பற்றி டிரம்ப் சூசகம்.. நல்ல செய்தி வருகிறது-வீடியோ

    ஹனோய்: இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி மறைமுகமாக நிறைய விஷயங்களை வெளிப்படுத்தி இருக்கிறது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உருவாக போகிறதா? என்பதுதான் இப்போது உலகம் முழுக்க கேள்வியாக உள்ளது. 1999க்குப் பின் மிகவும் அமைதியாக, நட்பாக இருந்த இந்தியா - பாகிஸ்தான் தற்போது முட்டிக்கொண்டு இருக்கிறது.

    நேற்று உச்சம் அடைந்த சண்டை, இன்று கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை குறித்து உலக நாடுகள் அதிக அக்கறை எடுத்து செயலாற்றி வருகிறது.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    உலகின் பல நாடுகளுக்கு நட்பு நாடாக இருக்கும் இந்தியா, எந்த போருக்கும் செல்ல கூடாது என்பதே பலரின் விருப்பம். அணி சேரா நாடாக இருந்து நல்ல பையன் பெயர் எடுத்த இந்தியாவே ஒரு போரை நடத்துவது சரியாக இருக்காது என்பதே பலரின் வேண்டுகோள். அதற்காக அமெரிக்கா, தொடங்கி ரஷ்யா வரை எல்லாம் மறைமுகமாக நிறைய நல்ல வேலைகளை பார்த்து உள்ளது. அமெரிக்க அதிபர் கூட இதுகுறித்து வியட்நாமில் பேசினார்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    வியட்நாமில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், குறிப்பிடத்தகுந்த நல்ல செய்திகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் இருந்து வருகிறது. அவர்களுக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனைகள் சரியாவது போன்ற நல்ல செய்திகள் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது. நான் இரண்டு நாடுகளுக்கு இடையில் பிரச்னையை சரி செய்ய பேசி வருகிறேன்.

    நல்லது

    நாங்கள் இவ்வளவு நாள், இந்த பிரச்சனையை தீர்க்க முயன்று வந்தோம். இவர்களுக்கு இடையில் நிறைய மனவருத்தம் இருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த பிரச்சனைகள் நீடித்து வருகிறது. நாங்கள் அதை தீர்க்க முயன்று கொண்டு இருக்கிறோம். இவர்களுக்கு இடையில் அமைதியை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். அது விரைவில் நடக்க போகிறது., என்று குறிப்பிட்டார்.

    சூசகம்

    சூசகம்

    இந்த நிலையில் டிரம்பின் பேச்சு, இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை முடிவிற்கு வந்துவிட்டதை காட்டுவதாக தெரிவிக்கிறார்கள். டிரம்ப் பிரச்சனை அனைத்தும் முடிந்தது தெரிந்ததுதான் இப்படி கூறி இருக்கிறார் என்றும் தெரிவிக்கிறார்கள். அதனால்தான் சில நல்ல செய்திகள் வருகிறது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    உலக நாடுகள் பல இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. சில முக்கிய காரணங்களுக்காக இந்த போருக்கு எதிராக, இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகள் மீதும் உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து இருக்கிறது. சீனா, ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள் வெளிப்படையாக போர் நடத்த வேண்டாம் என்று கூறி உள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    இந்த போருக்கு எதிராக இவர்கள் குரல் கொடுக்க நிறைய காரணம் இருக்கிறது. இந்தியாவானது ரஷ்யா, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு நல்ல நட்பாக இருக்க கூடியது. அதே சமயம் சீனாவுடன் சில சச்சரவு இருந்தாலும் சண்டை கிடையாது. பாகிஸ்தானின் நிலையும் இதுதான். பாகிஸ்தானும் இந்த நாடுகள் அனைத்துடனும் நெருங்கிய நட்பில் உள்ளது. இதனால்தான் போர் வேண்டாம் என்று இவர்கள் கூறுகிறார்கள்.

    ஏன் அப்படி

    ஏன் அப்படி

    போர் ஏற்படும் பட்சத்தில் இந்த நாடுகள் எல்லாம் அணி சேர வேண்டி இருக்கும். இதனால் நண்பர்கள் எதிரிகள் ஆக வேண்டி இருக்கும். பல நாடுகள் தாங்கள் செய்திருக்கும் ஒப்பந்தங்களை கைவிட வேண்டி இருக்கும். இரண்டு நாடுகளுக்கும் ஆயுதம் ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பெரிய தலைவலிக்கு உள்ளாகும்.

    முயல்கிறார்கள்

    முயல்கிறார்கள்

    அதேபோல் இது ஆசியாவில் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு, சீர்குலைவை ஏற்படுத்தும். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையும், ஜப்பானையும் இது மறைமுகமாக பெரிய அளவில் பாதிக்கும். ஆசியா மீண்டும் பழையபடி பெரிய பொருளாதார பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலை வரும். இதனால் இந்தியா - பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுத்து இந்த சண்டையை நிறுத்த வைத்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    Good news is coming, says USA President Trump on India - Pakistan's recent fight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X