அமெரிக்க ஷட்-டவுன்: ஒபாமா நிர்வாகம் சரியில்லை... பாபி ஜிண்டால் கண்டனம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதற்கு லூசியானா மாகாண கவர்னரும், அமெரிக்க வாழ் இந்தியருமான பாபி ஜிண்டால் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு குடியரசுக் கட்சி முட்டுக்கட்டை போட்டதைத் தொடர்ந்து, மொத்தமாக அரசாங்கத்தையே முடக்கிவைத்திருக்கிறார் அதிபர் ஒபாமா. இந்த ஷட்டவுன் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. அரசின் முடக்கத்தால், பல அரசு இணையதளங்களும் முடங்கிப் போயுள்ளன.
இதனைத் தொடர்ந்து, அதிபர் ஒபாமா அரசின் நிர்வாகத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லூசியான மாகாணத்தின் கவர்னரான, அமெரிக்க வாழ் இந்தியரான 42 வயது பாபி ஜிண்டாலும் இது குறித்து தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

வரும் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பாபி ஜிண்டால் போட்டியிடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது கண்டனம் அமெரிக்க மக்களிடையே அதிக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
மேலும், ஒபாமாவின் நிர்வாகம் குறித்து பாபி ஜிண்டால் தெரிவித்திருப்பதாவது, ‘வெள்ளை மாளிகையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். நாடு முழுவதும் உள்ள வாரியத் தலைவர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் தேர்ந்தெடுத்தார்களோ அதை அவர்கள் செய்யவில்லை என்றுதான் எனக்கு படுகிறது.
தற்போது நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் மற்றும் கட்டமைப்பு சவால்களில் அதிபர் பராக் ஒபாமாவும், நாட்டின் தேசியத் தலைவர்களும் சரியான தீர்வை காணவில்லை.
வெள்ளை மாளிகையில் யார் ஆட்சி செலுத்துகிறார்கள். யார் பிரமுகர்களாக இருக்கிறார்கள் என்பதல்ல பிரச்சினை. வெள்ளை மாளிகையில் உள்ளோர்கள் செயலிழந்து போய்விட்டனர் என்பதே பிரச்சினை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications