உஷா வேன்ஸுக்கு இப்படி ஒரு சிக்கலா.. டிரம்ப்பால் நெருக்கடியில் சிக்கிய இந்தியாவின் மானம்!

Subscribe to Oneindia Tamil

நூக்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸின் மனைவியான உஷா வேன்ஸ் இந்த வாரம் கிரீன்லாந்துக்கு செல்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷாவின் வருகைக்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த எதிர்ப்புக்கு காரணம் உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது அல்ல. மாறாக, கீரின்லாந்தை அமெரிக்கா தனதாக்கிக்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கான தூதுவராக உஷா வருகிறார் என்பதற்காகத்தான் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

Usha Vance Greenland international

வரும் வியாழக்கிழமை ஜே.டி.வேன்ஸ், உஷா வேன்ஸ் மற்றும் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆலோசக செயலாளர் மைக் வால்ட்ஸ், எரிசக்தி துறை செயலாளர் கிறிஸ் ரைட் ஆகியோர் கிரீன்லாந்துக்கு செல்கின்றனர். கிரீன்லாந்தின் வரலாற்று புராதான சின்னங்களையும், எல்லை பற்றிய தகவல்களையும் தெரிந்துக்கொள்ள சுற்றுலா நோக்கத்தில் அந்நாட்டுக்கு செல்வதாக வேன்ஸ் தெரிவித்திருக்கிறார். ஆனால் மறுபுறம் மைக் வால்ட்ஸ்ஸின் பயணம், கிரீன்லாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு பிரிவினர் கலாச்சார, பண்பாட்டு விஷயங்களையும், மக்களின் மனநிலையை பற்றி தெரிந்து கொள்ளவும் பயணிக்கின்றனர். இன்னொரு குரூப், ராணுவ பலம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள பயணிக்கிறது.

இந்த பயணத்திற்கு கிரீன்லாந்து பிரதமர் மூட் எகடே அதிருப்தி தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிகாரிகளின் இந்த பயணம் பிரச்சனையை தூண்டும் வகையில் அமையும் என்று எகடே கூறியிருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகமான 'Sermitsiaq' தெரிவித்திருக்கிறது. இதனை தி கார்டியன் செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவை சேர்ந்த உஷா அமெரிக்காவின் 2வது முதன்மை பெண்மணியாக (Second Lady) இருக்கிறார் என்பதில் ஒரு பக்கம் பெருமை இருந்தாலும், அவரது வருகையை கிரீன்லாந்து அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது இந்தியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கிரீன்லாந்தின் இந்த எதிர்ப்பு காரணம் டிரம்ப்பின் கொள்கைகள்தான். கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கிக்கொள்வோம் என டிரம்ப் பேசியிருந்தார்.

டிரம்ப் அடிப்படையில் ஒரு ரியல் எஸ்டேட் முதலை. எனவே கடந்த 2019ம் ஆண்டு அவர் அதிபராக இருந்த காலத்தில் கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்று பேசியிருந்தார். இதனையடுத்து 2025ல் மீண்டும் அதிகாரத்திற்கு வந்த அவர், நிச்சயம் கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்கியே தீரும் என கூறி வருகிறார். கடந்த 4ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "கிரீன்லாந்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும்" என்று பேசியிருந்தார்.

டென்மார்க்கின் கீழ் கிரீன்லாந்து இருந்தாலும் அது சுயஆளுகை பிரதேசமாக இருக்கிறது. அதாவது அந்த நாட்டுக்கு யார் பிரதமராக வர வேண்டும் என்பதை அந்த நாட்டு மக்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இதற்கும் டென்மார்க்குக்கும் எந்த தொடர்பும் இருக்காது. ஆனால் பெரும்பான்மையான அதிகாரம் டென்மார்க் வசம் இருக்கும். எனவே டிரம்ப் டென்மார்க்கை கார்னர் செய்ய ஆரம்பித்தார். கிரீன்லாந்தை கொடுக்கவில்லை எனில் வரியை போடுவோம், போர் தொடுப்போம் என்றெல்லாம் பயம் காட்டி வருகிறார்.

ஆர்க்டிக் பிராந்தியத்தில் ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கிரீன்லாந்து தேவை என டிரம்ப் கருதுகிறார். அனால் ரியல் எஸ்டேட் முதலையின் நோக்கம் அது அல்ல. கிரீன்லாந்தில் அரிய கனிமங்கள் குவிந்து கிடக்கின்றன. இதனை கைப்பற்றி, சீனாவுக்கு போட்டியாக அமெரிக்கா தன்னை வளர்ச்சியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதால்தான் கிரீன்லாந்துக்கு ஸ்கெட்ச் டிரம்ப் போட்டிருக்கிறார் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த அரசியல் பஞ்சாயத்துக்கு நடுவில்தான் இந்தியாவை சேர்ந்த உஷா வேன்ஸ் மாட்டி சிக்கி வருகிறார். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+