ப்ப்பா... மேக்கப் இல்லாத புது மனைவியைப் பார்த்து ஷாக்கான மாப்பிள்ளை!
அல்ஜீயர்ஸ்: திருமணத்தின் போது அதிக மேக்கப் போட்டு தன்னை அழகியாகக் காட்டி ஏமாற்றி விட்டதாக, புது மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அல்ஜீரியாவில் மாப்பிள்ளை ஒருவர். தன்னை ஏமாற்றியதற்காக மனைவியிடம் அவர் நஷ்ட ஈடும் கேட்டுள்ளார்.
சாதாரணமாகவே பெரும்பாலும் பெண்கள் மேக்கப் பிரியர்கள் தான். அதிலும், கல்யாணம் உள்ளிட்ட விஷேசங்கள் என்றால் கேட்கவா வேண்டும். தேவதை போல் தெரிய வேண்டும் என பியூட்டி பார்லர்களாக ஏறி இறங்கிக் கொண்டிருப்பர்.

ஆனால், இவ்வாறு அதிகப் படியான மேக்கப் போட்டதால் தன் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது ஒரு பெண்ணுக்கு.
இந்தச் சம்பவம் நடந்தது அல்ஜீரியாவில். திருமணம் முடிந்த மறுநாள் காலை உறக்கத்தில் இருந்து விழிந்த புது மாப்பிள்ளை தனது அறையில் யாரோ ஒரு பெண் புகுந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தனது மனைவியின் நகையைத் தான் அவர் திருட வந்துள்ளார் என நினைத்துள்ளார் அவர். ஆனால், பிறகு தான் தெரிந்தது வந்ததே அவர் மனைவி தான் என்று.
திருமணத்தன்று தேவதை போல் ஜொலித்த தன் மனைவி, மறுநாளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போனதால் குழம்பிப் போனார் அவர். இதனால், அவருக்கு உளவியல் பாதிப்பு ஏற்பட்டது.
திருமணம் மற்றும் அதற்கு முந்தைய சம்பிரதாயங்களின் போது மேக்கப் மூலம் தன்னைப் பேரழகியாக காட்டியுள்ளார் அப்பெண். இதனால், அவரது உண்மையான முகத்தை அவரது கணவரால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
இது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் அந்த மாப்பிள்ளை. மேலும், தன் மன உளைச்சலுக்கு தனது மனைவி நஷ்ட ஈடாக 20 ஆயிரம் டாலர் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications