துப்பாக்கி முனையில் 7 போலீசாரைக் கடத்திய மர்ம கும்பல்... பாகிஸ்தானில்!
லாகூர்: பாகிஸ்தானில் மர்மநபர்களால் துப்பாக்கி முனையில் 7 போலீசார் கடத்தப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ஒபாரா என்ற இடத்தில் போலீஸ் சோதனை சாவடி ஒன்று உள்ளது. நேற்று அங்கு துப்பாக்கிகளுடன் 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய ஒரு மர்ம கும்பல் வந்துள்ளது. அந்த கும்பலில் இருந்தவர்கள் சோதனை சாவடியில் இருந்த போலீசாரை தாக்கியுளனர். பின்னர் துப்பாக்கி முனையில் மிரட்டி 7 போலீசாரை அவர்கள் கடத்திச் சென்று விட்டனர்.

போலீசாரைக் கடத்திய கும்பல் கொலை, கொள்ளை என பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபடும் கும்பலாக இருக்கலாம் என பாகிஸ்தான் போலீசார் சந்தேகிக்கின்றனர். கடத்தப்பட்ட போலீசாரை மீட்கும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் அமைதியான மாகாணம் என்ற பெயரைப் பெற்றது. அங்கு இவ்வாறு ஒரு மர்ம கும்பல் போலீசாரைக் கடத்திச் சென்றது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications