சோமாலியா பீச் ரெஸ்டாரண்டில் குண்டுவெடிப்பு - தீவிரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை
மொகதிஷு: ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தலைநகர் மொகதிஷுவில் உள்ள பீச் ரெஸ்டாரண்ட் ஒன்றில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சோமாலியத் தலைநகரான மொகடீசுவில் உள்ள கடற்கரை உணவகம் ஒன்றின் அருகே பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து உணவகம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதற்கு சோமாலிய பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
அல்-கொய்தாவின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பான அல்-ஷபாப்புக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே, கடந்த ஜூலை 26ஆம் தேதி அல் ஷபாப் தீவிரவாதிகள் சோமாலியத் தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற தாக்குதலில் அல்-ஷபாப் அமைப்பையினர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications