ஏர்போர்ட்டில் நடந்த கொடூரம்.. பெண்களுக்கு அந்தரங்க உறுப்பில் நடத்தப்பட்ட சோதனை.. பாயும் வழக்கு!
தோஹா; கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் பெண் பயணிகள் சிலருக்கு அந்தரங்க உறுப்பில் சோதனை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் வழக்கு தொடுக்க உள்ளனர்.
கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய பெண் பயணிகளுக்கு இந்த அநீதி நேர்ந்தது. அங்கு பெண்கள் கழிவறையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போதுதான் அந்த குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து உடனடியாக மருத்துவ அதிகாரிகள் அழைக்கப்பட்டு அங்கு சோதனைகள் செய்யப்பட்டது.

குழந்தை
குழந்தையின் தாயை கண்டுபிடிப்பதற்கான சோதனைகள் செய்யப்பட்டன. அதன்படி ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு தயாராக இருந்த 13 ஆஸ்திரேலிய பெண் பயணிகள் தனிப்பட்ட சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்களின் பெண் உறுப்பில் மருத்துவர்கள் சோதனை செய்தனர். அவர்கள் சமீபத்தில் பிரசவம் செய்துள்ளனரா என்று சோதித்தனர்.

எதிர்ப்பு
ஆனால் 13 பேருமே அந்த குழந்தைக்கு தாய் இல்லை என்று சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. கைவிடப்பட்ட குழந்தையின் தாயை கண்டுபிடிப்பதற்காக பெண்களின் பெண் உறுப்பில் இப்படி சோதனை செய்தது பெரிய விமர்சனங்களை சந்தித்தது. பெண்களுக்கு எதிராக நேர்ந்த இந்த அநீதி உலகம் முழுக்க எதிர்ப்புகளை சந்தித்தது. பலர் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர்.

7 பேர் வழக்கு
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் வழக்கு தொடுக்க உள்ளனர். மொத்தம் 7 ஆஸ்திரேலிய பெண்கள் கத்தார் ஏர்வேஸுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளனர். Marque Lawyers என்ற அமைப்பின் மூலம் இவர்கள் வழக்கு தொடுக்க உள்ளனர். கத்தார் ஏர்வேஸுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில் வழக்கு தொடுக்க உள்ளனர்.

மன உளைச்சல்
இந்த பெண்கள் கடந்த ஒரு வருடமாக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் கடும் மன போராட்டத்தை சந்தித்துள்ளனர். அவர்களிடம் மன்னிப்பு கூட கேட்கப்படவில்லை. இது போன்ற அநீதி இனியும் ஏற்பட கூடாது. இதற்கு கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பெண்களை அவர்கள் அவமதித்து உள்ளனர்.

கஷ்டப்படுகிறார்கள்
அந்நாட்டு பிரதமர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் விமான நிலையத்தில் இனியும் இப்படி நடக்காது என்று உறுதி அளிக்கவில்லை. இதனால் இப்போதே கத்தார் ஏர்வேஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்கிறோம். நீதிமன்றத்தில் அவர்கள் பதில் சொல்லட்டும்.

சரியான நேரம்
2022 உலகக் கோப்பை கத்தாரில் நடக்க உள்ளது. அதற்கு பல பெண்கள் வருவார்கள். இவர்களுக்கு இதே அநீதி நேராது என்று சொல்ல முடியுமா? அந்த பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்காகவே நாங்கள் இந்த வழக்கை தொடுத்து இருக்கிறோம், என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications