மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத் இயக்கம், தீவிரவாத இயக்கம் கிடையாதாம்.. சொல்கிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் : இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இயக்கம், தீவிரவாத இயக்கம் கிடையாது என்று பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.
166 பேரை கொன்று குவித்த மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர், ஹபீஸ் சயீத். இவர் ஜமாத் உத் தவா என்ற தீவிரவாத இயக்கத்தை நடத்தி வருகிறார்.இந்த இயக்கம் தீவிரவாத இயக்கம் என ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தலைக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.65 கோடி விலையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பாகிஸ்தானில் சர்வசாதாரணமாக நடமாடி வருகிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு, தீவிரவாத இயக்கங்களை பட்டியலிட்டு உள்ளது. 60 இயக்கங்களை கொண்ட பட்டியலில் இந்த ஜமாத் உத் தவா இல்லை. இதேபோன்று அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹக்கானி வலை சமூகமும் தீவிரவாத இயக்க பட்டியலில் இடம்பெறவில்லை.
உலகின் அதி தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம், பட்டியலில் 39-வது இடத்திலும், மற்றொரு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது 29-வது இடத்திலும் உள்ளன.
இந்த பட்டியலில் அல்கொய்தா, பாகிஸ்தான் தலீபான் உள்ளிட்ட இயக்கங்களும் இடம் பிடித்துள்ளன. ஜமாத் உத் தாவாவும், ஹக்கானி வலை சமூகமும் பட்டியலில் இடம்பெறாதது, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கு தீவிரவாத ஒழிப்புக்காக அமெரிக்கா கூட்டணி ஆதரவு நிதி என்ற பெயரில் நிதி வழங்கி வருகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில், தலீபான் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்படுகிற ஹக்கானி வலை சமூகம் என்ற தீவிரவாத இயக்கத்தினை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹக்கானி தீவிரவாத இயக்கத்தின் தற்போதைய தலைவர் சிராஜூதீன் ஹக்கானி, சமீபத்தில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் துணைத்தலைவராக பதவி ஏற்றிருப்பது நினைவுகூரத்தக்கது.
இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் தீவிரவாத ஒழிப்பு நிதி தொடர்ந்து கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications