ஹஜ் கூட்டநெரிசல்: பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 29-ஆக உயர்வு
மினா: சவுதி அரேபியாவின் மினா நகரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மினா நகரில் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட யாத்ரீகர்கள் சாத்தான் மீது கல்லெறியும் சடங்கில் கடந்த வாரம் கலந்து கொண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 769 ஆக ஆகியுள்ளது. இந்த விபத்தில் 934 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்தியர்களின் எண்ணிக்கை இன்று 29 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக இருந்தது. இந்நிலையில் தற்போது பலியான 7 இந்தியர்களின் விபரம் தெரிய வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மன்சூருல் ஹக், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அன்வர் ஜான்ஹா, கேரளாவைச் சேர்ந்த எப்.ஏ. முனீர் வீட்டில், ஆமீனா பீவி, அப்துல் ரஹ்மான் அசரிதோடி, பி.வி. குன்ஹிமோன், மொயுத்தீன் அப்துல் காதர் ஆகியோர் தான் அந்த 7 பேர் ஆவர்.
கடந்த 25 ஆண்டுகளில் மினா நகரில் கூட்ட நெரிசலில் அதிகமானோர் பலியாகியுள்ளது தற்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களில் 18 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
முன்னதாக கடந்த 11ம் தேதி மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் கிரேன் முறிந்து விழுந்து 11 இந்தியர்கள் உள்பட சுமார் 100 பேர் பலியாகினர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications