‛‛திமிறி எழும் ஹமாஸ்’’.. இஸ்ரேல் தலைநகர் மீது மீண்டும் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்! அலறிய சைரன்கள்
காசா: காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகரான டெல்அலிவ் மீது மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் அமைப்பு நடத்தி உள்ளது. இதனால் மீண்டும் இருதரப்பு இடையே மோதல் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் தான் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காலம்காலமாக மோதல் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அமைத்துள்ளது.
இதற்கிடையே தான் கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அதிரடி தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகனைகளை ஏவினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கினர்.

இதில் 1,000க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 200க்கும் அதிகமானவர்கள பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தது. காசாவின் மீது இஸ்ரேல் ராணுவ விமானம், ஹெலிகாப்டர்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஹமாஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்கள் பலியாகினர்.
கடந்த அக்டோபரில் தொடங்கிய போர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை 35 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ள நிலையில் காசாவை சேர்ந்த மக்கள் பிற நாடுகளில் அகதிகளாக செல்கின்றனர். மேலும் காசா மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் பல லட்சம் மக்கள் பசி, பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 8 மாதங்களாக போர் நடந்து வரும் நிலையில் ஏறக்குறைய காசா நகர் மொத்தமாக உருக்குலைந்துவிட்டது. இதற்கிடையே தான் காசாவின் செயல்பாடு முழுவதுமாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது பல மாதங்களுக்கு பிறகு ஹமாஸ் சார்பில் இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பின் அல்- கஸ்ஸாம் ஆயுதப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சேதம், உயிர் பலி பற்றிய எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை.
இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப்பிரிவான அல்-கஸ்ஸாம் ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், "பொதுமக்களுக்கு எதிரான சியோனிசப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல்அலிவ் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் காசாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காசாவின் ஏவுகணை தாக்குதலை மோப்பம் பிடித்த இஸ்ரேலிய ராணுவம் டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய நகரங்களில் ஏவுகணை தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கவிட்டன. கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலுக்கான சைரன்கள் ஒலிக்காத நிலையில் நேற்று திடீரென்று கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் மீண்டும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications