கடவுளின் கைகளில் கட்டப்பட்ட பாலம்.. வியட்நாமில் அந்தரத்தில் நிற்கும் அதிசய கட்டிடம்!
வியட்நாமில் கட்டப்பட்டு இருக்கும் ''காவ் வாங்க் கோல்டன்'' பாலம் தற்போது உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறது.
Recommended Video

ஹனோய்: வியட்நாமில் கட்டப்பட்டு இருக்கும் ''காவ் வாங்க் கோல்டன்'' பாலம் தற்போது உலகம் முழுக்க வைரலாகி இருக்கிறது.
இந்த பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகி இருந்தாலும் தற்போது இந்த பாலம் வைரலாக முக்கிய காரணம் இருக்கிறது. இந்த பாலத்தை தாங்கி பிடிப்பது போல, பெரிய இரண்டு கைகள் கட்டப்பட்டு இருக்கிறது.
இதனால் இந்த பாலம் கடவுளின் கைகள் கொண்ட பாலம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.

கடவுளின் கை
வியட்நாமில் டானாங் அருகில் இருக்கும் பானா மலை பகுதியில் உள்ள காவ் வாங்க் கோல்டன் பாலத்தில்தான் இந்த கடவுளின் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. இரண்டு கைகள் விரிந்து வந்து பாலத்தை தாங்கி பிடிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் அங்கு இருக்கும் மலையில் இருந்து வருவது போல கான்கிரீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எப்போது திறந்தனர்
ஒருவருடமாக தீவிரமாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம், கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. தற்போதுதான் இதுகுறித்து தெரிந்து மக்கள் அந்த பகுதிக்கு வர தொடங்கி இருக்கிறார்கள். டிஏ லேண்ட்ஸ்கேப் நிறுவனத்தை சிறந்த வு வியட் ஆன் இதை வடிவமைத்து இருக்கிறார்.

பாலம் கட்டப்பட்டது எப்போது
ஆனால் இந்த கோல்டன் பாலம் ஏற்கனவே கட்டப்பட்டது. இதில் இருக்கும் கை பகுதிதான் இப்போது கட்டப்பட்டது. 150 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 1919ல் கட்டப்பட்டது. பிரென்ச் காலணி ஆதிக்கத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும் இது. இந்த பாலம் கட்டப்பட்டபின் அந்த பகுதியில் நிறைய சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கினர்.

உலக வைரல்
தற்போது அங்கு கைகள் இணைக்கப்பட்டு இருப்பதால் அதிக பயணிகள் குவிகிறார்கள். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அங்கு பயணிகள் குவிந்து வருகிறார்கள். அதேபோல் இதன் புகைப்படமும் உலகம் முழுக்க வைரல் ஆகி வருகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications