காபூலில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 நேட்டோ வீரர்கள் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் நேட்டோ ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கிய போது விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் பெரும்பாலான நேட்டோ படை வெளியேறிவிட்டது. இருந்தாலும்கூட சுமார் 12,000 வீரர்கள் கொண்ட படை ஆப்கனில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதில் 10,000 பேர் அமெரிக்க வீரர்கள். ஆப்கன் பாதுகாப்புப் படையினருக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல், சர்வதேச அமைப்புகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட குறிப்பிட்ட செயல்பாடுகளில் மட்டும் நேட்டோ படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களைக் குறி வைத்து தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து நேற்று தலைநகர் காபூலில் உள்ள நேட்டோ தலைமை அலுவலகத்தில் ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கிய போது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் 2 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதுக்கு முன்னதாக இங்கிலாந்து ராணுவ வாகனங்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். எனினும், உயிர் சேதம் எதுவும் இல்லை. மேலும் குண்டூஷ் நகரம் மீது குண்டு வீச்சு நடத்தியதாலும், மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் கொல்லப்படுவதற்காகவும் இந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications