7ம் நாளாக தொடரும் மோதல்.. ஹமாஸ் vs இஸ்ரேல்! யார் யாரிடம் எந்தெந்த ஆயுதங்கள் இருக்கிறது? இதோ விவரம்
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டிருக்கும் நிலையில், ஹமாஸ் படையினரும் முடிந்த அளவுக்கு பதில் தாக்குதலை தொடுத்திருக்கின்றனர். இப்படி இருக்கையில் இரு தரப்பினரிடமும் இருக்கும் ஆயுதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகதிகளாக வந்த யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியுள்ளனர். கடந்த 1947ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இது அரங்கேறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடிய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் மீது இஸ்ரேல் மேற்கு நாடுகளுடன் கைகோர்த்து தாக்குதலை நடத்தி இருந்தது. எனவே பொறுத்து பொறுத்து பார்த்த இந்த குழுக்கள் ஆயுதங்களை கையில் ஏந்த தொடங்கினர். இது 1980களில் அதாவது இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடங்கி 40 ஆண்டுகள் கழித்து நடந்திருக்கிறது.

ஆனால் இஸ்ரேலும் அதனுடன் சேர்ந்து மேற்கு நாடுகளும் இந்த விடுதலை அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியுள்ளன. இதன் பின்னர் இந்த அமைப்புகள் மீதும் பாலஸ்தீனத்தின் மீதும் நடத்தப்பட்ட தக்குதல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த தாக்குதலை எதிர்த்து ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் அடிக்கடி எதிர் தாக்குதலை தொடுத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 7ம் தேதியன்று எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை ஹமாஸ் நடத்தியது. ஒரே நேரத்தில் 5000 ஏவுகணைகள் வீசப்பட்டதால் இஸ்ரேலின் பாதுகாப்பு அம்சமான 'அயர்ன் டோம்' ஓவர் லோடாகி சில ஏவுகணைகளை தவறவிட்டிருக்கிறது. இது இஸ்ரேலில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பதில் தாக்குதல் நடத்துவதாக கூறி இஸ்ரேல், காசா மக்கள் மீது மிக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. காசா எனும் பகுதியே இருக்கக்கூடாது என்று வெளிப்படையாகவே இஸ்ரேல் அதிகாரிகள் முழங்கி வருகின்றனர். இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 447 குழந்தைகள், 250 பெண்கள் என மொத்தம் 1537 பாஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 6,268 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் இரு தரப்பினரிடமும் எந்த மாதிரியான ஆயுதங்கள் இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலை பொறுத்த அளவில் அதன் ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பமான அயர்ன் டோம்-க்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவாகிறது. இஸ்ரேல், அமெரிக்காவின் நெருங்கிய நாடு என்பதால் ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி வரை இஸ்ரேலுக்கு ஒதுக்கப்படுகிறது. மேலும் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த F-35 போர் விமானமும் இஸ்ரேலிடம் இருக்கிறது. இது மிகவும் மேம்பட்ட 5ம் தலைமுறையை சேர்ந்த நவீன விமானமாகும். இது தவிர டாங்கிகள், ட்ரோன்கள் போன்ற தளவாடங்களும் இருக்கின்றன.
எண்ணிக்கையை பொறுத்த அளவில் இஸ்ரேல் 1,70,000 போர் வீரர்களை கொண்டிருக்கிறது. மேலும் மேற்கொண்டு 3,60,000 பேரும் போருக்காக தயார் நிலையில் இருக்கின்றனர். இஸ்ரேல் வெளியில் தெரியாத சில அணு ஆயுதங்களையும் கொண்டிருக்கிறது. இது தவிர அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காசா அருகே நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் சிறப்பு படை ஒன்று இஸ்ரேலுக்கு விரைந்து வருகிறது. இதுதான் இஸ்ரேலின் பலம்.
இந்த அசுர பலத்திற்கு எதிராக சண்டையிட்டு வரும் ஹமாஸ் படையினரின் மொத்த எண்ணிக்கை வெறும் 15,000-20,000தான். இவர்களிடம் இருப்பதும் சாதாரண போர் ஆயுதங்கள்தான். கைத்துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், ராக்கெட்டுகள், கையெறி குண்டுகள், நீண்ட தூரம் சுடும் ஸ்னைப்பர் வகை துப்பாக்கிகளைதான் ஹமாஸ் கொண்டிருக்கிறது. இதுவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இதில் ஆச்சரியப்படுத்தும் விஷயம் என்னவெனில் இந்த போரை தொடங்கி வைக்க ஹமாஸ் இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட்டுகளை வீசியது. இந்த ராக்கெட்டுகளை ஹமாஸ் படையினரே தயாரித்துள்ளனர். இவை அனைத்தும் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது கிடையாது. ஆனால், தாக்கினால் பலமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கூறுகின்றனர்.
ஹமாஸ் போலவே மற்றொரு போராளி குழுவும் 30,000 ராக்கெட்டுகளை வைத்திருக்கலாம் என இஸ்ரேல் சந்தேகம் தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு படைகள் தவிர இஸ்ரேலுக்கு மற்றொரு தலைவலியாக இருப்பது ஹிஸ்புல்லா அமைப்புதான். இது ஹமாஸுக்கு ஆதரவளித்து இஸ்ரேலின் வடக்கு எல்லையில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டது. ஹிஸ்புல்லா அமைப்பில் சுமார் 1 லட்சம் வீரர்களும், 1.5 லட்சம் ஏவுகணைகளும் இருப்பதாக அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கூறியுள்ளார். இது தவிர துருக்கி தனது போர் கப்பலை காசாவுக்கு அனுப்ப திட்டமிட்டிருப்பது இவர்களுக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications