கமெனி இறந்ததும்.. புர்காவை கழற்றிவிட்டு சாலையில் டான்ஸ் ஆடிய பெண்? ஈரான் வீடியோ வைரல்
தெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து போர் விமானங்கள் குண்டு மழை பொழியும் நிலையில், பாஸ்டர் மாவட்டம் முழுக்க புகை மண்டலம் போல காட்சியளிக்கின்றது. இத்தகைய இக்கட்டான சூழலுக்கு நடுவே தெஹ்ரானில் பெண் ஒருவர் தனது ஹிஜாப்பை கழற்றி வைத்துவிட்டு சாலையில் உற்சாகமாக நடனம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்கா ராணுவ தளங்களை குறிவைத்து அட்டாக் செய்து வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக வளைகுடா நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது..

ஈரான் மீது தாக்குதல்
ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா ஒருங்கிணைந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்களால், தெஹ்ரான் மற்றும் பிற ஈரானிய நகரங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. உச்சபட்சமாக ஈரானிய தலைவர் அயேதுல்லா கமேனியும் கொல்லப்பட்டுள்ளார்.
ஹிஜாப்பை கலற்றி வைத்து விட்டு டான்ஸ்
ஈரான் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு மழை பொழியும் நிலையில், பாஸ்டர் மாவட்டம் புகை மண்டலம் போல காட்சியளித்தது.. தலைநகரம் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் மதிப்பிடப்பட்டன. இத்தகைய இக்கட்டான சூழலுக்கு நடுவே தெஹ்ரானில் பெண் ஒருவர் தனது ஹிஜாப்பை கழற்றி வைத்துவிட்டு சாலையில் உற்சாகமாக நடனம் ஆடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நெட்டிசன்கள் கருத்து
போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையிலும் சாலையில் உற்சாகமாக நடனம் ஆடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. ஈரானில் பெண்களுக்கு எதிராக அடக்குமுறை கமேனி ஆட்சி காலத்தில் நிலவி வரும் நிலையில், நீண்ட காலம் காத்திருந்த சுதந்திரத்தை உணர தொடங்கியுள்ளதால் பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.
ஆபத்தான நேரத்தில் துணிச்சலைக் காட்டுவதாக சில நெட்டிசன்கள் குறிப்பிட்டனர். போரினால் ஏற்படும் துயரங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்றும் சிலர் பதிவிட்டனர். அதேபோல, வீடியோக்களில் உள்ள சண்டை முடிந்த பிறகு ஆபத்துகளை எதிர்கொள்ளலாம் என்று சில நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானில் பெண்களின் உரிமைகள் மற்றும் பொது வாழ்க்கை குறித்த சர்வதேச கவனத்தை மீண்டும் ஈர்த்தன. இதை சமூக மாற்றத்தின் அறிகுறியாகவும், தனிப்பட்ட சுதந்திரத்திற்கான அழைப்பாகவும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் தற்போது ஈரான் - அமெரிக்கா இடையேயான யுத்தம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. உச்ச தலைவர் அயேதுல்லா கமேனி கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பழிவாங்குவோம் என்று ஈரான் கூறியுள்ளது. அமெரிக்காவும் எச்சரித்து இருப்பதால் வளைகுடாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications