பரபரப்பு.. பாகிஸ்தானில் இந்து கோவிலை அடித்து நொறுக்கி சராமாரி தாக்குதல்.. பகீரை கிளப்பும் வீடியோ
இந்து கோவில் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
கராச்சி: பாகிஸ்தானில் இந்து கோவில் மீது குண்டர்கள் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை தந்து வருகிறது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள், அகமதியாக்கள், ஷியாக்கள் சிறுபான்மையினர்களாக உள்ளனர்... அங்கிருக்கும் முஸ்லிம் மக்கள் தொகையில் 2 சதவீத பேர் மட்டுமே இந்துக்கள் ஆவர்..
இங்கு சிறுபான்மையினரை பலவந்தப்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றப்படுவதும் அதிகளவில் அரங்கேறி வருகிறது... மேலும் பெண்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி திருமணம் செய்வதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவமாகும்.

மதங்கள்
பல முறை இந்து பெண்கள் உட்பட பிற மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் இந்த பகுதியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்... இதுபோன்ற சூழலில் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள் .. இந்துக்களின் கோயில்கள் மீது அடிக்கடி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் இதில் ஒன்றாகும்.. அந்த வகையில், இப்போதும் ஒரு சம்பவம் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ரஹிம் யார்கான் மாவட்டத்தில் நடந்துள்ளது.. அங்குள்ள ஒரு இந்து கோயிலை தாக்கி உள்ளனர்.

கோவில்
2 தினங்களுக்கு முன்பு, 8 வயது சிறுவன் மதப்பள்ளியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.. இதனாலேயே இந்து கோயிலை தாக்கியதாக காரணம் சொல்லப்படுகிறது.. அதாவது, மதராசா லைப்ரரியில் மத புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, போர்வையின் மீது அந்த சிறுவன் வேண்டுமென்றே சிறுநீர் கழித்துவிட்டானாம்... அந்த சிறுவன் மீது நடவடிக்கை தேவை என்று சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
இதையடுத்து போலீசாரும், அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.. பிறகு சிறுவனுக்கு ஜாமீனும் அளித்தனர்.. இதனால் போராட்டக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர்.. ஜாமீன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர், இந்து கோவில் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.. இந்த தகவல் கிடைத்ததுமே, போலீசார் விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் இந்து கோவிலை குண்டர்கள் அடித்து நொறுக்கிவிட்டனர்..

ஜாமீன்
ஏனென்றால், பாகிஸ்தான் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும், அவர்களுக்கு மரண தண்டனை தருவதுதான் வழக்கமாம்.. அப்படி ஒரு குற்றத்தை அந்த சிறுவன் செய்தும், தகுந்த நடவடிக்கை எடுக்காமல் ஜாமீன் தந்ததாலேயே சிலர், இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதனால் ரஹிம்யார்கான் மாவட்டத்தில் பதட்டம் சூழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications