ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் ஆதிக்கம்! மிகப்பெரிய வரலாற்று மாற்றம்! ஆனால்.. காத்திருக்கும் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

கான்பெரா: ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே முதல் முறையாக, அந்நாட்டின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் தற்போது 9,71,020 பேர் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இது மொத்த மக்கள் தொகையில் 5.2%.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, இங்கு இங்கிலாந்தை சேர்ந்தவர்கள்தான் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்தியர்கள் இதனை முறியடித்துள்ளனர். 2013-ல் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த இங்கிலாந்து வம்சாவளியினரின் எண்ணிக்கை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது.

Indians

இந்தியர்களின் உழைப்பு

இந்தியா, இங்கிலாந்து நாட்டவர்களை தொடர்ந்து, மூன்றாவது இடத்தில் சீனாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும் (7,32,000), நான்காவது இடத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்களும் (6,38,000) உள்ளனர்.

இந்தியாவில் கூட தான் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது எல்லாம் ஒரு மேட்டரா? என்று கேள்வி எழலாம். விஷயம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியாகக் குடியேற்றம் இருந்து வருகிறது. 1990-களின் தொடக்கத்திலிருந்து ஆஸ்திரேலியா பொருளாதார மந்தநிலையை சந்திக்காமல் இருப்பதற்கு குடியேற்றமே முக்கியக் காரணம்.

ஆஸ்திரேலிய பொருளாதாரம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லைகள் மூடப்பட்டதால் மக்கள் தொகை தற்காலிகமாகச் சரிந்தது. இருப்பினும், அதன் பிறகு வெளிநாடுகளில் பிறந்த குடியிருப்பாளர்களின் பங்கு 2022-ல் 29.5 சதவீதத்திலிருந்து, 2025-ல் 32 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஆக இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது என்பது, ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு நாம் அதிக அளவில் பங்களித்து வருகிறோம் என்று அர்த்தம்.

இந்தியர்களுக்கு எதிர்ப்பு

ஒருபுறம் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபுறம் இது அரசியல் தளத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. ஆஸ்திரேலியா தனது வரலாற்றிலேயே மிக மோசமான வீட்டு வசதி தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது. இதற்கு அதிகப்படியான குடியேற்றமே காரணம் என்று ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். அதாவது உழைத்து கொடுத்த நமக்கு, உட்கார்ந்து சாப்பிட இடமில்லை என்று பாட தொடங்கியிருக்கிறார்கள்.

சிக்கிலில் இந்தியர்கள்

சில பழமைவாத கட்சிகள், குறிப்பாக 'ஒன் நேஷன்' போன்ற கட்சிகளுக்கு உள்ளூர் மக்கள் அதிக அளவில் ஆதரவு தெரிவிக்க தொடங்கியிருக்கின்றனர். இந்த கட்சியின் தலைவர் பவுலின் ஹான்சன், குடியேற்றத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இக்கட்சி வலுவடைந்தால், ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்களின் நிலை சிக்கலுக்கு உள்ளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+