For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாப்பாடு வீணாவதைத் தடுக்க இந்த ஹோட்டல் மேனேஜர் செய்த ஐடியாவைப் பாருங்கள்!

Google Oneindia Tamil News

லூசேன், சுவிட்சர்லாந்து: தனது ஹோட்டலில் சாப்பிட வருபவர்கள், சாப்பாட்டை வாங்கி சரியாக சாப்பிடாமல் வீணாக்குவதைத் தடுக்க ஒரு உத்தியைக் கையாண்டு வருகிறார் சுவிட்சர்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேலாளர். அதாவது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பசி, பட்டினியில் வாடும் குழந்தைகளின் புகைப்படங்களை பெரிய சைஸில் ஹோட்டலில் வைத்துள்ளார்.

மேலும், உங்களது உணவை சாப்பிடுங்கள் - ஆப்பிரிக்காவில் பலருக்கு உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுகிறார்கள் என்றும் அந்தப் படங்களுக்குக் கீழே எழுதி வைத்துள்ளார் அவர்.

Hotel manager uses pictures of starving African children to cut food waste

இதன் மூலம் ஹோட்டலுக்கு சாப்பிட வருவோர் உணவின் முக்கியத்துவத்தை உணருவார்கள், வீணாக்க மாட்டார்கள் என்பது இவரது நம்பிக்கை. மேலும் தேவையான அளவுக்கு வாங்கிச் சாப்பிடும் பழக்கத்தையும் கொண்டு வருவார்கள் என்றும் இவர் நம்புகிறார்.

மேலும் தங்களுக்கு உணவு கிடைத்தது நமது அதிர்ஷ்டம் என்பதையும் அவர்கள் உணர்வார்கள் என்றும் அந்த மேலாளர் கூறுகிறார்.

இந்த ஹோட்டலின் சுவர்களில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு டேபிளிலும் ஆப்பிரிக்கக் குழந்தைகளின் படங்களை ஒட்டியுள்ளார் அவர். இந்த ஹோட்டல் லூசேன் என்ற நகரில் உள்ளது. பெயர் மோனோபால் ஹோட்டல். 4 நட்சத்திர ஹோட்டலாகும் இது. ஆங்கிலம் மற்றும் சீன மொழியில் அந்த நோட்டீஸின் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த மேலாளரின் செயலுக்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும், எதிர்ப்புகளும் வரத் தான் செய்கிறது. இந்த ஹோட்டலுக்கு அதிக அளவில் சீனர்களே வருவதால், சீனர்கள் சாப்பாட்டை வீணாக்குபவர்கள் என்று இவர் கிண்டல் செய்கிறார் என்றும் சலசலப்பு கிளம்பியுள்ளது.

English summary
This Hotel manager used pictures of starving African children to cut food waste in his hotel in Swiss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X