Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவை நோக்கி வந்த சரக்கு கப்பல் நடுக் கடலில் கடத்தல்! ஹவுதி கிளர்ச்சிப் படை கைவரிசை

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: காசா மீது 44வது நாளாக இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்து வரும் நிலையில், காசாவுக்கு சப்போர்ட்டாக களத்தில் இறங்கியுள்ள ஏமனின் ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சி படை, இஸ்ரேல் பணியாளர்கள் உள்ள சரக்கு கப்பலை கடத்தியுள்ளது. இந்த கப்பல் இந்தியாவுக்கு வர இருந்த நிலையில் கடத்தப்பட்டிருக்கிறது.

இஸ்ரேல் உருவானது எப்படி?: கடந்த 1940களில் பாலஸ்தீனம் முழுவதும் இஸ்லாமியர்கள்தான் இருந்தனர். அப்போது ஜெர்மனியிடமிருந்து அடைக்கலம் தேடி வந்த யூதர்கள் இங்கு அகதிகளாக குடியேறினர். ஆனால் அவர்களுக்கு ஒரு நாடு தேவைப்பட்டது. எனவே பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தங்களுக்கான எல்லையை வகுத்துக்கொண்டனர். இதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் சப்போர்ட்.

Houthi rebel force hijacked a cargo ship belonging to Israel which was on its way to India

மோதல் ஏன்?: ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த பாலஸ்தீனர்களையும் மேற்கு கரை, காசா என இரண்டாக பிரித்துவிட்டு மீதமுள்ள நிலத்தை இஸ்ரேல் என யூதர்கள் பெயரிட்டுக்கொண்டனர். சொந்த மண்ணிலேயே தங்களை அகதிகளாக்கிவிட்டார்கள் என்கிற கோபம்தான் ஹமாஸ் எனும் அமைப்பை உருவாக்கியது. இதுதான் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலின் சுருக்கமான கதை.

போர்: ஆக இப்படியாக சொந்த நிலத்திற்காக ஹமாஸும், அவர்களுக்கு எதிராக இஸ்ரேலும் அடிக்கடி மோதல்களில் ஈடுபடுவதுண்டு. இந்த மோதல் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியஸானது. அதாவது ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி 1,400 பேரை கொல்ல, இஸ்ரேல் கண்மூடித்தனமான பதில் தாக்குதலில் இறங்கியது. இப்படி 44வது நாளாக தொடர்ந்து வரும் தாக்குதல் காரணமாக காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குழந்தைகள்.

போர் நிறுத்தம்: ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து ஐநா பொது சபையில் ஜோர்டன் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. இதை இஸ்ரேல் கடைபிடிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில் அதை மதிக்காமல் இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில் ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தற்போது இஸ்ரேல் நாட்டின் பணியாளர்கள் நிரம்பியுள்ள சரக்கு கப்பலை கடத்தியுள்ளனர்.

எச்சரிக்கை: காசா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வேண்டும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், செங்கடலில் இஸ்ரேலிய கப்பல் எது வந்தாலும் அதை கடத்துவோம் என்றும் எச்சரித்திருந்தார்கள். அதாவது,

"இஸ்ரேலுடன் தொடர்புடைய அனைத்து கப்பலையும் நாங்கள் தாக்குவோம். எனவே இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்களில் பணியாற்றும் தங்கள் நாட்டின் பணியாளர்களை உலக நாடுகள் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள். செங்கடல் இனி எங்கள் கட்டுப்பாட்டில்" என கூறியிருந்தனர்.

கடத்தல்: இதனையடுத்து இன்று Galaxy Ladder எனும் சரக்கு கப்பலை இந்த கிளர்ச்சியாளர்கள் கடத்தியுள்ளனர். இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் உறுதி செய்திருக்கிறார்கள். ஆனால் இது இஸ்ரேலிய கப்பல் இல்லை என்று மறுத்துள்ளார்கள். ஆனால் இந்த கப்பல் ராமி உங்கர் எனும் இஸ்ரேலிய தொழிலதிபருக்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கப்பல் இந்தியா நோக்கி வந்துக்கொண்டிருந்த நிலையில் இதை கிளர்ச்சியாளர்கள் கடத்தியுள்ளனர்.

கப்பலுக்குள் இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை மீட்க இஸ்ரேல் பேச்சுவார்த்தையை தொடங்கி ஆக வேண்டும். இது அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுக்கு நெருக்கடியான நிலைதான். இந்த கடத்தல் காரணமாக செங்கடலில் கப்பல் போக்குவரத்து தடைப்படும் அபாயம் எழுந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+