"எப்புட்றா.." கன்னி கழியாமல் "குவா குவா!" 16 ஆண்டு தனிமை.. ஆனாலும் திடீரென கருவுற்ற முதலை!
சேன் ஜோஸ்: கோஸ்டாரிகா நாட்டில் முதலை ஒன்று ஆண் துணையே இல்லாமல் கர்ப்பமடைந்துள்ளது. அதன் கரு மரபணு ரீதியாக 99.9% தாய் முதலையை ஒத்து இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகின் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக முதலைகள் கருதப்படுகிறது. முதலைகள் நிலத்தில் என்ன தான் சற்று பலவீனமாக இருப்பது போல இருந்தாலும்.. நீரில் இறங்கினால் அதன் வேகம் எங்கோ போய்விடும். அதற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது.
கரையின் அருகே நீர் குடிக்க வரும் விலங்குகளைத் தண்ணீருக்குள் இருக்கும் முதலைகள் மின்னல் வேகத்தில் தாக்கிக் கொன்று விடும். கண் மூடி திறப்பதற்குள் இந்த தாக்குதல் நடந்து முடிந்துவிடும்.

முதலை: அதேபோல இப்போது பூமியில் வாழும் பழமையான விலங்குகளில் ஒன்றாகவும் இந்த முதலை கருதப்படுகிறது. இதற்கிடையே கோஸ்டாரிகா நாட்டில் உள்ள வனவிலங்கு பூங்காவில் இருந்த முதலை ஒன்று அதுவாகவே கர்ப்பமடைந்தது. பொதுவாகக் கர்ப்பமடையும் போது, ஆண் மற்றும் பெண்ணின் மரபணு ஒன்றாகவே கலந்து இருக்கும். ஆனால், இந்த கருவின் மரபணு 99.9% தாய் முதலையைப் போலவே இருந்துள்ளது.
இந்த சம்பவம் விஞ்ஞானிகள் உட்படப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "சுறாக்கள், பறவைகள், பாம்புகள் மற்றும் பல்லிகள் ஆகியவற்றில் இதுபோல ஆண் துணை இல்லாமல் கருத்தரிப்பது என்பது பரவலாக நடக்கும்.. மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளாகப் பாம்புகளை வளர்க்கத் தொடங்கிய போது, இது குறித்த செய்திகள் அதிகம் பரவின. இருப்பினும், முதலைகளில் இதுபோல நடப்பதை நான் இப்போது தான் கேள்விப்படுகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
கன்னி பிறப்பு: இதனை ஆய்வாளர்கள் "கன்னிப் பிறப்பு" அதாவது "virgin birth" என்று குறிப்பிடுகிறார்கள். parthenogenesis என்று அழைக்கப்படும் இந்த முறை பறவைகள் மத்தியில் அதிகம் காணப்படும்.. இருப்பினும், முதலைகளில் இது போல நடப்பது இதுவே முதல்முறையாகும்.
கோஸ்டாரிகா நாட்டில் வனவிலங்கு பூங்காவில் இருந்த 18 வயதான அமெரிக்கப் பெண் முதலை தான் இப்படி தானாகவே கருத்தரித்துள்ளது. முதலையின் கரு முழுமையாக வளர்ந்து உள்ளது. அந்த முதலை இரண்டு வயதாக இருந்தபோது இந்த வனவிலங்கு பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டது. அது எப்போதும் மற்ற முதலைகளிடமிருந்து பிரிந்தே இருந்துள்ளது.

அந்த முதலை போட்ட குட்டிகள் அங்கே உயிரியல் பூங்காவில் ஊழியர்களால் அடைகாக்கப்பட்டன. இருப்பினும், 3 மாதங்கள் ஆகியும் அவை தானா குஞ்சு பொரிக்கவில்லை.. இதையடுத்து அவற்றை ஊழியர்களே திறந்துள்ளன. அதில் ஒரு முட்டை மட்டுமே கரு முழுமையாக வளர்ந்துள்ளது. இருப்பினும், அது இறந்த நிலையில் இருந்துள்ளது. மரபணு சோதனையில் அந்த குட்டிக்கும் அதன் தாய்க்கும் 99.99% ஒரே மாதிரியான மரபணு இருப்பது தெரிய வந்துள்ளது.
எப்படி: இதுபோன்ற கன்னிப் பிறப்பு எப்படி நடக்கிறது என்பதையும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர். அதாவது ஒரு முட்டை செல் அதன் தாயின் உடலில் முதிர்ச்சியடையும் போது, அது தேவையான பாதி மரபணுக்களை உருவாக்க மீண்டும் மீண்டும் பிரிக்கிறது. இந்த நிகழ்வில் போலார் பாடிஸும் எனப்படும் சில குறிப்பிட்ட மரபணுக்கள் தனியாகப் பிரிகிறது.
சில நேரங்களில் இந்த போலார் பாடிஸை விலங்குகளால் முட்டையுடன் இணைக்க முடியும். இதன் மூலம் குட்டி பிறக்கத் தேவையான குரோமோசோம்களை உருவாக்க முடியும். இருப்பினும், முதலைக்கு இதுபோல குழந்தை பிறந்துள்ளது ஆய்வாளர்களால் நம்பவே முடியவில்லை.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications