நெகிழ்ச்சியின் உச்சம்!அம்மா அடித்த ஜோக்..சிரித்தபடி 5 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட மகள்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த நிலையில், அவர் திடீரென அம்மாவின் பேச்சைக் கேட்டு எழுந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலகில் தாய்ப் பாசத்திற்கு எதுவுமே ஈடாகாது என்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை என்றாலும் சரி, இந்த உலகமே நம் மீது நம்பிக்கை இழந்திருந்து இருந்தாலும் தாய் நம் மீது வைக்கும் பாசம் குறையவே குறையாது.

எந்தளவுக்கு மோசமான பிரச்சினை என்றாலும் அம்மா எப்போதும் நம்முடன் இருப்பார். இதை எடுத்துக் காட்டும் வகையிலான ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பகீர் சம்பவம்: அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 2017இல் கார் விபத்தில் சிக்கினார். அந்த மிக மோசமான கார் விபத்தில் அவர் உயிர் பிழைத்தாலும் கூட அவர் மீளவே முடியாத கோமாவுக்கு சென்றார். கடந்த 5 ஆண்டுகளாகவே அந்த பெண் கோமாவில் தான் இருந்துள்ளார். இந்தச் சூழலில் தான் அவர் கடந்த 2022 ஆகஸ்ட் 25ஆம் தேதி திடீரென கோமாவில் இருந்து வெளியே வந்துள்ளார். அவர் எப்படி கோமாவில் இருந்து மீண்டார் என்பது குறித்து தகவல்கள் தான் இப்போது வெளியே வந்துள்ளது.
ஜெனிபர் ஃப்ளெவெல்லன் என்ற பெண் தான் கோமாவில் இருந்து வெளியே வந்துள்ளார். அன்றைய தினம் அவரது தாயார் பெக்கி மீன்ஸ், கோாமாவில் இருந்த பெண்ணிடம் பேசியுள்ளார். அப்போது அவர் ஏதோ காமெடி செய்த நிலையில், அதற்கு சிரித்தவாறே ஜெனிபர் ஃப்ளெவெல்லன் எழுந்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண்ணின் தாயார் பெக்கி மீன்ஸ் கூறுகையில், "அவர் முதலில் எழுந்த போது நான் அதிர்ச்சி அடைந்தேன். ஏனென்றால் அவர் சிரித்துக் கொண்டே எழுந்தார். இத்தனை காலத்தில் ஒருபோதும் இப்படி நடந்ததே இல்லை.
இந்தியர்கள் இனி ஈரானுக்கு செல்ல விசா தேவையில்லை- அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆனா 4 கண்டிஷன் இருக்கே
காமெடி: இது ஏதோ கனவு நனவானது போலத் தான் இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையே ஏதோ சிறு கதவு தான் இருந்தது.. அதை இந்த காமெடி திறந்து வைத்துவிட்டது என்பது போலத் தெரிகிறது" என்றார். ஃப்ளெவெல்லன் 5 ஆண்டுகள் கோமாவில் இருந்த நிலையில், அதில் இருந்து மீண்டுள்ளார். இருப்பினும், அவர் முதலில் பேசவே சிரமப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் தாயார் பெக்கி மீன்ஸ் தனது அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக பெக்கி மீன்ஸ் கூறுகையில், "அவர் திடீரென எழுந்தார். ஆனால் அவள் எழுந்த போது முழுமையாக நார்மலாக இல்லை.. அவளால் பேச முடியவில்லை. ஆனால் நான் பேசுவது எல்லாம் அவளுக்கு புரிந்தது. அதைக் கேட்டுத் தலையசைத்துக் கொண்டே இருந்தார். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இப்படி திடீரென எழுந்திருப்பார் என்பதை நான் துளியும் எதிர்பார்க்கவே இல்லை" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அரிது: இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "இது மிகவும் அரிதானது.. அவர் திடீரென கோமாவில் இருந்து எழுந்தது மட்டுமில்லை. அவர் உடல்நிலையும் முன்னேறி இருக்கிறது. இது நம்ப முடியாத ஒன்று தான்.. தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications