முகம் கழுவ பாத்ரூம் போன ஸ்ரீதேவி எப்படி மர்மமாக குளியல் தொட்டிக்குள் விழுந்திருப்பார்?
Recommended Video

துபாய்: முகம் கழுவ பாத்ரூம் சென்றபோது குளியல் தொட்டிக்குள் மூழ்கி இறந்துள்ளார் ஸ்ரீதேவி. அது எப்படி சாத்தியம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்றிருந்தார் நடிகை ஸ்ரீதேவி. அங்கே, Jumeirah Emirates Towers என்ற நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவில், திருமண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பார்ட்டி நடைபெற்றது.
அப்போது ஹோட்டல் பாத்ரூமுக்கு சென்று முகம் கழுவி வருவதாக ஸ்ரீதேவி கூறிவிட்டு சென்றுள்ளார்.

15 நிமிடங்கள்
ஸ்ரீதேவி சென்று 15 நிமிடங்களுக்கு மேலான பிறகும், திரும்பவில்லை. எனவே ஸ்ரீதேவி கணவர் போனி கபூர், ஹோட்டல் ஊழியர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். அப்போது குளியல் தொட்டிக்குள் மூழ்கி ஸ்ரீதேவி இறந்துகிடந்துள்ளார். அவர் இதய பாதிப்பால் இறந்துவிட்டார் என்ற முடிவுக்கு குடும்பத்தார் வந்துவிட்டனர். அந்த தகவலே ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது.

இதய பிரச்சினை இல்லை
இந்த நிலையில், ஸ்ரீதேவி தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதும், மாரடைப்பு இல்லை என்ற தகவலும் உடல் கூறு மற்றும் தடயவியல் சோதனைகளின் முடிவில் தெரியவந்துள்ளது. இதனால், வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்யவில்லை என்பதை உறுதி செய்யும்விதமாக, இதில் குற்றவியல் நோக்கம் இல்லை என்ற தகவலையும் தடயவியல் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

மது போதை
இறக்கும் முன்பாக, மது போதையில் ஸ்ரீதேவி இருந்ததாக தடயவியல் மற்றும் உடல்கூறு சோதனைகள் கூறியுள்ளன. எனவே போதையில் முகம் கழுவ சென்றபோது தடுமாறி பாத்டப்புக்குள் அவர் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. குப்புற விழுந்திருக்கலாம், எனவே, போதையில் அவரால் எழுந்திருக்க முடியாமல் மூச்சு திணறி பலியாகியிருக்கலாம் என்பதே இப்போது மருத்துவர்கள் வைக்கும் ஒரே வாதம்.

பாத்ரூம் இதுதான்
நட்சத்திர ஹோட்டலான Jumeirah Emirates Towers-ல் பாத்ரூம் மிகவும் பெரிதாக இருந்திருக்க வேண்டும். எனவே, முகம் கழுவும் வாஷ் பேஷினுக்கும், பாத்-டப்புக்கும் நடுவே தூரம் இருந்திருக்க வேண்டும். பிறகு எப்படி பாத்-டப்பில் தவறி விழுந்திருப்பார் என்ற சந்தேகமும் எழுந்தது. இதற்கு தீர்வாக அந்த ஹோட்டலின் வெப்சைட்டில் பாத்ரூம் புகைப்படங்களை ஆய்வு செய்தோம். அந்த போட்டோக்களின் இணைப்புகளை கொடுத்துள்ளோம். அதில் முகம் கழுவும் இடமும், பாத்-டப்பும் அருகிலேயே இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே போதையில் தவறி விழுந்தே இறந்திருக்க வேண்டும் என்பதே இப்போதைய சந்தேகம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications