"இது" நடந்தால் பேரழிவு நிச்சயம்.. உக்ரைன் போரில் உள்ள பெரிய சிக்கல்.. அனைத்தும் அதையே காட்டுகிறது!
கீவ: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் நிலையில், வெளிநாட்டு வீரர்களும் இரு நாடுகளின் தரப்பில் போரிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் போர் தொடர்கிறது.
போர் தொடரும் சூழலில், உக்ரைன் மற்றும் ரஷ்யா என இரு தரப்பிற்கும் ஆதரவாக வெளிநாட்டு வீரர்கள் போரில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது ஏற்கனவே இருக்கும் நிலைமை மேலும் மோசமாகும் என்றே அஞ்சப்படுகிறது.

உக்ரைன் போர்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடக்கும் மோசமான போர்களில் ஒன்றாக இந்த உக்ரைன் போர் கருதப்படுகிறது. இந்தப் போர் காரணமாக இதுவரை 36 லட்சத்திற்கும் அதிகமானோர் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். ஒரு மாதத்திற்கு மேலாகப் போர் தொடரும் சூழலில், இதனால் இரு நாட்டு ராணுவங்கள் மட்டுமின்றி, உக்ரைன் அப்பாவி பொதுமக்களுக்கும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் போர் தொடங்கியது முதலே வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பு தொடர்பான பேச்சு இருந்து கொண்டே தான் இருக்கிறது.

உக்ரைன் ரஷ்யா
முதலில் கடந்த பிப்.27ஆம் தேதி, போர் தொடங்கிய சில நாட்களில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முதல்முறையாக வெளிநாட்டு வீரர்கள் ரஷ்யாவுக்கு எதிராக போராடலாம் என அழைப்பு விடுத்தார். இருப்பினும், பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகள் உக்ரைனுக்காக போரில் கலந்து கொள்ளும் நபர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படும் என எச்சரித்தார். அதேபோல கடந்த மார்ச் 11ஆம் தேதி உக்ரைன் போரில் கலந்து கொள்ள விரும்பும் வெளிநாட்டினர் பங்கேற்கலாம் என ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.

ஏன் தேவை
உக்ரைன் நாட்டிற்கு வெளியில் இருந்து கட்டாயம் வீரர்கள் தேவைப்பட்டனர்.அதனால் தான் ஜெலன்ஸ்கி இப்படியொரு முடிவை எடுத்தார். உக்ரைன் உடன் ஒப்பிடும்போது ரஷ்யா வலிமையான ராணுவத்தைக் கொண்டு உள்ளது. இதைச் சமாளிக்கவே உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கினர். அதேநேரம் உக்ரைன் போரில் நேரடியாகத் தலையிட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மறுத்துவிட்டன. அதற்கு ஒரே காரணம் உக்ரைன் நேட்டோ உறுப்பினர் இல்லை என்பது தான். இருந்த போதிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரிக்கக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து உக்ரைனுக்கு உதவுகின்றன.

ரஷ்யா
மறுபுறம் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்குப் போரிடுகிறார்கள் என்பதை விளம்பரப்படுத்தும் ஒரு யுக்தியாகவே ரஷ்யா பார்க்கிறது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா பக்கம் நியாயம் இருக்கிறது என்றும் இதற்காகவே வெளிநாட்டினர் ரஷ்யாவுக்காகப் போரிடுகின்றனர் என்ற கருத்து உருவாக்கத்தை உருவாக்க முயல்கிறது. உக்ரைன் நாட்டில் பல ஆயிரம் வெளிநாட்டு வீரர்கள் ரஷ்யா சார்பில் சண்டையிடுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், இதைச் சர்வதேச அமைப்புகள் எதுவும் உறுதி செய்யவில்லை.

சிரியா
பெரும்பாலும் சிரியா நாட்டில் இருந்தே பலரும் ரஷ்யாவுக்கு நாட்டிற்காகப் போராடுகின்றன. சிரியாவில் உள்நாட்டுப் போர் காரணமாகப் பொருளாதாரம் நலிவடைந்து, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடும் சூழலில், அங்கிருந்து பலரும் போரில் பங்கேற்கின்றன. அதேபோல ரஷ்யாவின் செச்சென் குடியரசு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் கடந்த காலங்களிலும் ரஷ்யாவுக்கு ஆதரவாகச் சண்டையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல Wagner Group என்ற தனியார் ராணுவத்தையும் உக்ரைன் போரில் ரஷ்யா பயன்படுத்துகிறது.

இது தான் காரணம்
இது உலகின் வலுவான ராணுவங்களில் ஒன்றாக உள்ள போதிலும், ரஷ்யா ஏன் அதிகளவில் வெளிநாட்டு வீரர்களைப் போரில் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறது. போர் ஒரு வாரத்தைக் கடந்த தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தால் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. உக்ரைன் வீரர்களின் எதிர்ப்பு பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்தைத் திணறடித்துள்ளது. இதன் காரணமாகவே வெளிநாட்டு வீரர்கள் அதிகம் ரஷ்யா பயன்படுத்துகிறது. மேலும், அவர்கள் உயிரிழந்தாலும் கூட தனது இமேஜ்ஜுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாதது என கருதுகிறார் புதின்.

பிரச்சினை
அதேபோல அவர்கள் முறையான ராணுவ பயிற்சியையும் முடித்து இருக்க மாட்டார்கள். அவர்கள் ராணுவம் போல இல்லாமல், எதிரிகளைத் தாக்கி அழிப்பதை மட்டுமே நோக்கமாக வைத்துச் செயல்படுவார்கள். மேலும், அவர்களுக்கு நகர்ப்பகுதிகளில் சண்டையிட்டு அனுபவம் உள்ளதால், உக்ரைன் போரில் அது பெரியளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மறுபுறம் இது போன்ற வெளிநாட்டு வீரர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாது என்பதால் சில மோசமான செயல்களிலும் இவர்கள் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் முக்கியமானது என்னவென்றால், போர் முடிந்த பின்னரும் கூட, இதுபோன்ற தனியார் ராணுவ வீரர்களைக் கண்டறிந்து வெளியேற்றுவதும் கடினம்.
Recommended Video

பேரழிவு
ஏனெனில் இதுபோன்ற வீரர்கள் பிளாக்மெயில் செய்வதையே விரும்புகின்றன. உக்ரைன் நாட்டில் வெளிநாட்டிரின் இருப்பு போர் சீக்கிரம் முடியாது என்பதையே காட்டுவதாக உள்ளது. இருப்பினும், போரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது என்பது இது முதல்முறை இல்லை. கடந்த 1980களில் நடந்த ஆப்கன் போரில் ரஷ்யா சார்பில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். அதேபோல போஸ்னியா மற்றும் செச்சினியா, சிரியா வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பேரழிவு விளைவுகளை உலகம் கண்டது. இதுபோல வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்ட போர் அனைத்திலும் மிக மோசமான விளைவே ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications